மண்பானை தண்ணீர் நல்லதா | Is Manpaanai water useful | Organic Living   மண்பானை எங்கேயோ கேள்விப்பட்டது மாதிரி இருக்கின்றது அல்லவா. நம் முன்னோர்களுடைய சமையலறையில் மண்பானை இருந்தது. ஆனா, இப்போ இன்ஸ்டென்ட் குக்கிங் என்னும் பெயரில் சமையல், சமையல் அறை எல்லாமே மாறிவிட்டது .இதனால் இன்ஸ்டென்ட் நோய்கள், இன்ஸ்டென்ட் மருந்துகள், இன்ஸ்டென்ட் மரணங்கள் கூட ஏற்படுகின்றது.
        இதற்கு நிரந்தர தீர்வு என்னவென்றால் மண்பானையை நம் அன்றாட வாழ்விற்கு மீண்டும் கொண்டு வரவேண்டும். இந்த மண்பானை இயற்கையாவே தண்ணீரை வடிகட்டி மட்டுமன்றி குளிர்ச்சியாகவும் வைத்திருக்கின்றது. இது எப்படி நடக்கிறது என்று பார்த்தால், இந்த மண்பானையில் உள்ள பல நுண்துகள்கள் மூலமாத்தான் நடைபெறுகின்றது.
        இந்த நுண்துகள்களின் செயல்பாடுகள் என்னவென்றால், மண்பானையில் உள்ள தண்ணீரை ஆவியாக மாற்றி அதனுடைய வெப்பத்தை வெளியேற்றுகின்றது.  இதன் காரணமாகத்தான், எப்போதும் தண்ணீரை குளிர்ச்சியாக வைத்திருக்கின்றது.
        தண்ணீரை மட்டுமல்ல காய்கறிகள், கீரைகள், பழங்கள் போன்றவற்றை கெடாமல் சில நாட்கள் வைத்திருக்க மண்பானை உதவுகின்றது. நாம் தண்ணீரை பிளாஸ்டிக் குடங்களில் சேமித்து வைக்கின்றோம். அது, ஹசார்டியஸ் கெமிக்கல்ஸ்ஸை உருவாக்குகிறது. அதை குடிக்கும் நமக்கு பல நோய்கள் வருகின்றது.
        ஆனால் மண்பானையில் கெமிக்கல்ஸ் பாதிப்பு கிடையாது. இந்த மண்பானை நமக்கு தேவையான மினரல்ஸை [சக்தியை] தண்ணீர் மூலமாகவே தருகின்றது. இது பி.எச்.ரிசிவ்வை பேலன்ஸா வைத்திருக்கின்றதால், நமக்கு ஆரோக்கியமான இரத்த ஓட்டத்தை தருகின்றதுபி.எச்.ரிசவ்வை பற்றி இன்னொரு கட்டுரையில் காணலாம்.
        மொத்தத்தில் சொல்லனும்னா மண்பானை நீர்மண்பாணை சமையல்  மண்பானை பதனம் இவை எல்லாமே ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கின்றது. அதனால் தாங்களும், தங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் மண்பானை கடைக்குப் போயி மண்பானையை வாங்குங்க. உங்க சமையல் அறையை, மண்பானை சமையல் அறையா மாத்துங்க. நன்மைகள் கிடைக்கும் உறுதியாக……!