சீரகம் உடல் எடையை சீராக்கும் | Weight Loss by cumin | Organic Livingஅன்றாடம் சமையலில் பயன்படுத்தும் மசாலா உணவுப் பொருளான சீரகம் உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகின்றதுஇந்த சீரகத்தை தினமும் உட்கொண்டு வந்தால், உடலில் உள்ள மெட்டபாலிஸம் அதிகரித்து செரிமாணம் சீராகி கலோரிகள் வேகமாக எரிக்கப்பட்டு வருவது தெரியும்.
        ஒரு டீஸ் ஸ்பூன் சீரகப்பொடியை தயிருடன் கலந்து உட்கொண்டு வந்தால் உடல் எடை குறையும். இரண்டு டீஸ் ஸ்பூன் சீரகத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறப் போட்டு மறுநாள் காலையில் இந்த நீரை கொதிக்க வச்சு, வடிகட்டி அதில் சிறிதளவு எலுமிச்சைப் பழத்தை பிழிந்து இரண்டு வாரத்திற்கு தினமும் குடித்து வர உடல் எடை குறையும்.
            தினமும் சூப்புடன் ஒரு டீஸ் ஸ்பூன் சீரகப் பொடியை கலந்து குடித்து வர உடல் எடை குறையும். அதை போலவே அரை டீஸ் ஸ்பூன் சீரகப் பொடியை தண்ணீரில் அத்துடன் சிறிதளவு தேன் கலந்து குடித்தால் உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கும்.
        சீரகம் உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகளை எரிக்கும். கெட்ட கொழுப்புக்கள் சேருவதை தடுக்கும். ஏனெனில் இது உடலில் மெட்டபாலிஸத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களும் ஆன்டியாக்ஸைடுகளும் ஏராளமாக உள்ளது. இதனால், இந்த சீரகத்தை அன்றாடம் உணவில் எடுத்து வந்தால் கொழுப்புகளால் ஏற்படும் தொப்பையைக் குறைக்கலாம்.
        உடல் எடையைக் குறைப்பதில் எலுமிச்சை, இஞ்சி முதன்மையானவை. இதனுடன் சீரகத்தை சேர்த்துக் கொண்டால் இதன் சக்தி அதிகரிக்கும். இந்த சீரகத்தோட வேறு சில நன்மைகள் என்னவென்று பார்த்தால், இரத்த சோகையை சரி செய்யும். செரிமாணத்தை மேம்படுத்தும், மாரடைப்பை தடுக்கும், ஞாபக சக்தியை அதிகரிக்கும், நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஒழுங்குப்படுத்தும், வாயுத் தொல்லையை குணமாக்கும் சக்தி இந்த சீரகத்திற்கு உண்டு.
        எனவே சீரகத்தை நம் உணவில் சேர்ப்போம்: சிறப்பாக வாழ்வோம்:

சீரகம் உடல் எடையை சீராக்கும் | Weight Loss by cumin | Organic Living  https://youtu.be/JT8nIjLSsZ4