டீ குடித்த திருமுருகன் காந்தி அதிரடி கைது ! Thirumurugan Gandhi Arrested...





டீ குடித்த திருமுருகன் காந்தி அதிரடி கைது ! Thirumurugan Gandhi Arrested again | Inaiyam https://youtu.be/iRhVgd0wxSU

ஆயுத பூஜையும் அறிவியல் உண்மையும் | Truth Behind Aayutha Poojai | Yogam |...





ஆயுத பூஜையும் அறிவியல் உண்மையும் | Truth Behind Aayutha Poojai | Yogam | யோகம் https://youtu.be/tjCZQvFS0PA

காய்ச்சல் சீக்கிரம் சரியாக மிளகு கஷாயம் | How to Cure fever Pepper Treat...





காய்ச்சல் சீக்கிரம் சரியாக மிளகு கஷாயம் | How to Cure fever Pepper Treatment | Yogam https://youtu.be/_5zFzatO6Kk

இயற்கை வாழ்வியல் முன்னோட்டம் | Why we should live Natural Life | Organic...





இயற்கை வாழ்வியல் முன்னோட்டம் | Why we should live Natural Life | Organic Living https://youtu.be/DBNihS7Cenk

திருக்குறளை இந்த வயதிலும் மனப்பாடமாக வைத்திருக்கும் கணேசன் ஐயா | Tamil ...



திருக்குறளை இந்த வயதிலும் மனப்பாடமாக வைத்திருக்கும் கணேசன் ஐயா |  Tamil Vaalga https://youtu.be/RoqqCW-8Y3g

உடல் கழிவுகள் என்றால் என்ன ? எப்படி சரி செய்வது ? What is Toxin and how ...





உடல் கழிவுகள் என்றால் என்ன ? எப்படி சரி செய்வது ? What is Toxin and how to remove it | Yogam https://youtu.be/Q5avjQJmjYc

மூலிகை உடலியக்க மருத்துவம் | யோகம் | Yogam





மூலிகை உடலியக்க மருத்துவம் | Herbal Health Treatment | யோகம் | Yogam  https://youtu.be/c3JcgE7QfAQ

2 நிமிடத்தில் நூடில்சுடன் காத்திருப்பது ஆபத்தா ஆரோக்கியமா | is Noodles g...





2 நிமிடத்தில் நூடில்சுடன் காத்திருப்பது ஆபத்தா ஆரோக்கியமா | is Noodles good or bad | Yogam https://youtu.be/g6-N7mg94eA

திருக்குறள் தாத்தா கணேசன் | தமிழ் தாத்தா | Tirukkural Thaatha Ganesan | ...





திருக்குறள் தாத்தா கணேசன் | தமிழ் தாத்தா | Tirukkural Thaatha Ganesan | Tamil Vaalga https://youtu.be/Iy2nv0En6E0

ஆரோக்கியமாயிருக்க இவ்வளவு மருத்துவமா | Lot of Treatment for healthy body...





ஆரோக்கியமாயிருக்க இவ்வளவு மருத்துவமா | Lot of Treatment for healthy body | Organic Living https://youtu.be/n1VvcCKJQ6Y

⁠⁠⁠⁠⁠கைகண்ட அனுபவ மருத்துவம்!



(#கீழ்கண்ட மருத்துவக் குறிப்புகள் எல்லாம் மலைவாழ்மக்கள் பயன்படுத்தும் மருத்துவக் குறிப்புகள்.கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காதது.அனைவருக்கும் பயன்படவேண்டி தேடிப்பிடித்து பகிர்கிறேன்.பாதுகாப்பாக இதனை எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.உங்களுக்கும்/நண்பர்களுக்கும் பயன்படும்.-



கைகண்ட [அனுபவ] மருத்துவம் !!



நாடோடி மக்களின் பழக்கவழக்கங்களை நன்கு அறிந்து, அதன் பயனாகப் பல மூலிகைகளின் சிறப்பை உணர்ந்து, சித்த வைத்தியத்திலும் தேர்ந்தவர் பிலோஇருதயநாத்.



அவரின் கைகண்ட அனுபவம் மருத்துவம் இவை."



#சிலஎளியமருத்துவம்: !!!



#வயிற்றுவலிக்கு:




முருங்கைக் கீரையை ஒரு கைப்பிடி எடுத்துச் சுத்தமான தண்ணீரில் கழுவி, உரலில் போட்டு நன்றாக இடித்துச் சாறு பிழிந்துகொண்டு, காலை, பகல், மாலையில் கொஞ்சம் சர்க்கரையுடன் அதைக் கலந்து உணவுக்குமுன் 1/4 ஆழாக்குச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலி குணமாகும்.



#இடுப்பில்வரும்வண்ணார்_புண்:




இது சாதாரணமாய் எங்கே வாழ்ந்தாலும் சரி, சிலருக்கு உண்டாகும். இந்தப் புண் இருப்பவர்கள் இடுப்பைச் சுத்தமாகக் கழுவிக்கொண்ட பின், வாழைப் பழத்தோலின் உள் பக்கத்தைப் புண்ணின்மேல் வைத்து கட்டிக் கொள்ள வேண்டும். அப்பொழுது தாங்க முடியாத எரிச்சல் உண்டாகும். சில நாட்களில் முற்றும் குணம் அடைந்து விடும்.



#கண்நோய்:

கடுமையான கண் நோய் இருப்பவரகளுக்கு நீலகிரியில் வாழும் ஆதிவாசிகள், வெங்காயத்தை வெள்ளைத் துணியில் மூட்டை கட்டிப் பிறகு நசுக்கிக் கண்ணில் பிறிவார்கள். சில மணி நேரங்களில் நோய் குணமாகிறது.


#டான்சில்ஸ்:

சுத்தமான குங்குமப் பூவை இரண்டு கீற்று எடுத்து வெற்றிலையில் வைத்து வியாதியுள்ளவர்களுக்கு காலை, மாலை கொடுக்க, இரண்டே நாட்களில் குணம் காணலாம்.



#தேள்_கொட்டினால்:

கேரள நாட்டு ஆதிவாசிகள் தேள் கொட்டினால் உடலின் எந்தப் பக்கத்தில் கொட்டுகிறதோ. அதற்கு எதிர்ப்பக்கத்துக் கண்ணில் ஒரு சொட்டு சுத்தமான உப்புத் தண்ணீரை விடுகிறார்கள். உப்பு நீரால் தேள் கொட்டிய இடத்தில் கீழ்பக்கமாக உருவிக் கழுவ வேண்டும். 5 நிமிடத்தில் விஷம் இறங்கி விடுகிறது.



#வயிற்றில்உள்ளநாக்குபூச்சி_போக:

வயிற்றில் நாக்குப் பூச்சி இருப்போர் கண்ட மருந்தும் சாப்பிடக்கூடாது. வயதுக்குத் தகுந்தாற்போல் நல்ல சிற்றாமணக்கெண்ணெய் ஒரு கிண்ணத்தில் ஊற்றி, அதே எண்ணெயின் அளவுக்கு நாட்டுச் சர்க்கரையைப் போட்டு நன்றாகக் கலக்கிய பிறகு அதிகாலையில் சுமார் ஆறு மணிக்குக் குடித்துவிட வேண்டும். வயிற்றில் இருக்கும் பூச்சிகள் இந்த வெல்லத்தைச் சாப்பிட வரும். அந்த வேகத்தில் பேதியுடன் கலந்து பூச்சிகள் வெளியில் வந்து விடும். அன்று மிளகு ரசம் மட்டுமே சாப்பிட வேண்டும். குளிக்கக்கூடாது..பப்பாளிப் பாலுடன் சுத்தமான தேன் கலந்து சாப்பிட்டாலும் வயிற்றிலுள்ள நாக்குப் பூச்சி இறந்துவிடும். பிறகு கொஞ்சம் ஆமணக்கு எண்ணெய் சாப்பிட்டால் பூச்சிகள் வெளியே வந்துவிடும். வயதுக்குத் தக்கபடி அளவுகள் வைத்துக் கொள்ள வேண்டும்.



#தொண்டைக்_கம்மலுக்கு:

சித்தரத்தை, அதிமதுரம், அரிசித்திப்பிலி வாங்கி ஒன்றாக இடித்து, அதை இரு பாகமாக்கி ஒரு பாகத்தில் எண்ணூறு மில்லியளவுத் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும். அந்த கஷாயம் இருநூறு மில்லியளவுத் தண்ணீராகச் சுண்டியதும், அதை ஒரு நாளைக்கு மூன்று வேளையாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும். மீதிப் பாதி மருந்தை மறு நாளைக்கு அதைப்போலவே செய்து மூன்று வேளை சாப்பிட வேண்டும். இதைப்போல் நான்கு நாட்களுக்கு சாப்பிட்டால் தொண்டைக் கம்மல் குணமாகும்.



#ஒற்றைத்_தலைவலி :

மருதோன்றி (மருதாணி)யை “அழவான இலை’ என்றும் சொல்வார்கள். அந்த இலையை அரைத்து எந்தப் பக்கத்தில் தலைவலி இருக்கிறதோ, அந்தப் பக்கத்துக் காலின் அடிப்பாகத்தில், பாதத்தில் புதிய பத்துக் காசு அளவு வட்டமாக வைத்து, துணியால் கட்டிக் கொண்டு இரவில் படுத்துவிட வேண்டும். ஒரு தடவை செய்தால் போதும். உடனே ஒற்றைத் தலைவலி நின்றுவிடும். மறுபடி தலைவலி வரும்போது இப்படிச் செய்யலாம்.
அஜீரணம்: அடிக்கடி அஜீரணத்தால் துன்பப்படும் நண்பர்கள் தினமும் பப்பாளிப் பழத்தை ஒரு துண்டு சாப்பிட்டு வந்தால் எப்படிப்பட்ட அஜீரணமும் போகும்.



#கல்லீரல்_வீக்கம்:

கல்லீரல் வீக்கமும் காய்ச்சல் கட்டியும் உள்ள குழந்தைகளுக்குப் பப்பாளிப் பழத்தைச் சாப்பிடக் கொடுத்தால் சில நாட்களில் கட்டாயம் குணமாகும். பழத்தை அல்வா, ஜாம் முதலியவை செய்தும் சாப்பிடலாம்.



#கக்குவான்_இருமல்:

அதிமதுர வேரை வாயில் அடக்கி வைத்துக் கொண்டு அதன் நீரை விழுங்கும்படி செய்யலாம். மக்காச் சோளக் கதிர்த் தண்டைக் கஷாயம் வைத்துச் சாப்பிடலாம்.இவற்றைக் கொடுத்தால் கக்குவான் இருமல் அடியோடு நீங்கி விடும் என்று நினைக்க வேண்டாம். கொஞ்சம் குறையும். குழந்தைகளுக்கு வாந்தி அதிகம் இராது. எப்படியும் மூன்று மாதம் இருந்த பின்தான் இருமல் போகும“.



#குடல்_வாதம்:

முள்ளங்கியின் விதையைக் கஷாயமிட்டுச் சாப்பிடக் குடல் வாதம் அறவே நீங்கும்.



#தாது_விருத்தியாக:

முள்ளங்கி விதையையும், முள்ளங்கிக் கிழங்கையும் அதிகமாக உடயோகித்து வந்தால் தாகு விருத்தியாகும்.



#ஜலதோஷம்:

பகலில் சாப்பாட்டின் போது ஒரு பச்சை வெங்காயத்தைத் துண்டு துண்டாக்கி உணவுடன் மூன்று வேளை சாப்பிட்டால் ஜலதோஷம் நீங்கும்.



#வயிற்றில்_கட்டி:

வெள்ளை முள்ளங்கியின் சாற்றை எடுத்து அரை அவுன்சு வீதம் 90 நாட்கள் சாப்பிட வேண்டும். 91ம் நாள் குணம் தெரியும். காலையில் ஆகாரத்துக்கு முன் சாப்பிட வேண்டும். அரை மணிக்குப் பிறகு எதையும் சாப்பிடலாம்.



#தலையில்புழுவெட்டு :

1. ஆற்றுத் தும்மட்டிக்காயை நான்காக வெட்டி அதில் ஒரு பகுதியைத் தலையில் தேய்க்க வேண்டும். இதன் கசப்புத் தன்மையைத் தாங்காத பூச்சி, உடலில் இறங்கி ரத்தத்தின் வேகத்தில் இறந்துவிடும். தும்மட்டிக்காயைச் சுமார் 90 நாட்கள் தேய்க்க வேண்டும். 2. வெங்காயத்தையும் மூக்குப் பொடியையும் ஒன்றாக இடித்துத் தலையில் எப்பகுதியில் சொட்டை இருக்கிறதோ, அப்பகுதியில் எரிச்சலைப் பாராமல் சுமார் 15 நாட்கள் தேய்க்க வேண்டும்.



பாதத்தில் பித்த வெடிப்பு: ஐந்து நாட்களுக்கு விடாமல் வேப்ப எண்ணெயைத் தடவினால் பித்த வெடிப்பு மறைந்துவிடும். ஆறு மாதத்துக்கு இந்தத் தொல்லை இராது.



#வெண்குஷ்டம் :

மருதாணி வேர். அதாவது அழவான இøல் செடிவேர் சிறிது எடுத்து உலர்த்தி வைத்துக் கொள்ளவும். அதில் கொஞ்சம் எடுத்துப் பசும்பால் விட்டு நன்றாக அரைத்துக் கொண்டு வெண்மையாக இருக்கும் தோலின்மேல் பூசவும். நாளடைவில் தோலின் வெண்ணிறம் மாறிவிடும்.



#காலராவைத்_தடுக்க:

காலை, மாலை ஒரு தேக்கரண்டி தேன் குடித்தால் வாந்திபேதி வராமல் தடுத்துக் கொள்ளலாம்.
மூலம், வாய்ப்புண், வயிற்றுப்புண்: இந்த வியாதிகளுக்குத் துத்தி இலைக் கீரையைச் சமைத்துச் சாப்பிட வேண்டும். புளி ஊற்றக் கூடாது. பகல் உணவுடன் ஒரு வேளை மட்டும் சாப்பிட வேண்டும். இந்தக் கீரை சாப்பிடும்போது மற்றக் கீரைகளை உண்ணக்கூடாது.



#கடுமையான_சுளுக்கு:

சுளுக்குப் பிடித்த இடத்தில் துத்தி இலையை மெதுவாகத் தேய்த்துவிட வேண்டும். மேலிருந்து கீழ்நோக்கிக் காலையில் தேய்த்த ஒரு மணி நேரத்துக்குப்பின், தாங்கக்கூடிய சூட்டில் வெந்நீரை ஐந்து நாட்களுக்கு விட வேண்டும். பிறகு குணமாகும்.



#காதிலசீழ்வடிதல்:

எட்டிக் கொட்டையை வேப்பெண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். ஒரு வாரம் கழித்து “ஒரு கோணி ஊசியில் குத்திக் கொள்ள வேண்டும். எட்டிக் கொட்டையைக் கொளுத்தியதும் கொட்டையிலிருந்து எண்ணெய் சொட்டும். அதுதான் எட்டித் தைலம். மூன்று சொட்டு ஆற வைத்து, காதில் விட வேண்டும். சீழ் குணமாகும். (5 வயதுக்குள் இருக்கும் குழந்தைகளுக்கு இதைத் தரக்கூடாது)



#காலில்_ஆணி:

ஊறுகாய்க்கு ஊற்றும் காடியைப் பஞ்சில் எடுத்துக் கொண்டு அணி இருக்கும் காலில் ஒரு நாளைக்குப் பலமுறை தடவிக் கொண்டே வரவேண்டும். 45 நாட்களில் குணம் தெரியும் ஆணி மறைந்துவிடும்.



#பல்வலி :

1. கீழாநெல்லி இலையைக் காலையில் நன்றாக மென்று அப்படியே பல் துலக்க வேண்டும். மூன்று நாட்களுக்குப் பல் துலக்கினால் போதும். குணம் தெரியும்.

2. தென்னை மரத்தின் வேரை நன்றாக மென்று மூன்று நாட்களுக்குப் பல் துலக்க வேண்டும். குணம் தெரியும்.



#வழுக்கைத்தலையில்முடி_வளர:
காலையிலும், இரவிலும் சாதாரண வெங்காயத்தைத் தலை நிறையத் தேய்த்து வந்தால் இரண்டு மூன்று மாதங்களில் கருகருவென்று முடி வளர்ந்துவிடும்.



#நாட்டுப்புற_மருந்துகள்


நாட்டுப்புற மருத்துவத்தில் ஆடவர், பெண்டிர், குழந்தைகள் போன்றோர்களின் பல்வேறு வகை நோய்களுக்கான மருந்துகளும் அவற்றைப் பயன்படுத்தும் முறைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றை இனிக் காணலாம்.


#மகளிர்_மருத்துவம்





திருமணமான - திருமணமாகாத பெண்களுக்குப் பொதுவாக வரும் நோய்களும் அவற்றிற்கான மருந்துகளும் கீழ்வருமாறு :


1. வெள்ளைபடுதல் - அசோகப் பட்டையைக் காய்ச்சி வடித்த நீரை அளவுடன் பருகி வர நிற்கும்.


2. பிறப்புறுப்பில் புண் - மாசிக்காயை அரைத்துத் தடவிவர ஆறும்.


3. சீரற்ற மாதவிலக்கு - அரிநெல்லிக்காயைப் பச்சையாகச் சாப்பிட்டு வரச் சீர்பெறும்.


4. மாதவிலக்குக் கால வயிற்றுவலி - முருங்கை இலைச்சாற்றை வெறும் வயிற்றில் குடித்து வர நிற்கும்.


5. உடல் நாற்றம் - ஆவாரந் தழையுடன் கஸ்தூரி மஞ்சளைச் சேர்த்து அரைத்துக் குளித்து வர நீங்குவதுடன் மேனியும் அழகு பெறும்.


திருமணத்துக்குப் பின்பு வரும் சில நோய்கள், அவற்றிற்கான மருந்துகளை இனிக் காணலாம்.


1. கர்ப்பகால வாந்தி - அரிநெல்லிக்காயை உண்டு வர நிற்கும்.


2. பிரசவ காலத்தில் ஏற்படும் வயிற்றுப்புண் - வேப்பந்தழையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து உண்டு வரப் புண் ஆறி வயிற்றிலுள்ள பூச்சிகள் நீங்கிப் பிரசவித்த பெண்கள் நலம் பெறுவர்.


3. பிரசவத்திற்குப் பின் உடல் மெலிவு - சீரகம், பூண்டு, குறுமிளகு சேர்த்துச் சமைத்த வெள்ளாட்டுக் கறியை உண்டு வர உடல் வலுப்பெற்று நலம் திரும்பும்.


4. தாய்ப்பால் பற்றாக்குறை - பேய் அத்திப்பழத்தை உண்டுவரப் பெருகும்.


#ஆடவர்_மருத்துவம்





ஆண்களுக்கென்று உள்ள தனிநோய்களும் அவற்றைப் போக்குவதற்கான மருந்துகளும் பின்வருமாறு :


1. நீர் பிரிதலில் சிக்கல் - தாமரைப் பூவைப் பச்சையாகச் சிறிதளவு உண்டு வரத் தாராளமாய் நீர் பிரியும்.


2. மூத்திர எரிச்சல் - கரிசலாங்கண்ணி எனும் கீரையின் சாற்றை அளவுடன் குடித்து வரத் தீரும்.


3. விந்து வெளியேறல் - ஒரு குவளை பசும்பாலுடன் பேரிச்சம்பழங்கள் சிலவற்றைப் போட்டுச் சாப்பிட்டு வர குணமாகும்.


4. ஆண்மைக் குறைவு - இலுப்பைப் பூவை அரைத்துப் பசும்பாலில் கலந்து குடித்து வர ஆண்மைத் தன்மை பெருகும்.


5. வெள்ளைபடுதல் - பழம்பாசி இலைகளைப் பசும்பாலில் விட்டு அரைத்துத் தொடர்ந்து இரண்டு வேளை காலையில் அளவாகப் பருகி வர நோய் விலகும்.


#குழந்தையர்_மருத்துவம்



அனைத்து நோய்களும் குழந்தைகளைத் தாக்கவல்லன என்றாலும் அவற்றுள் சிலவும் அவற்றிற்கான மருந்துகளையும் கீழே காணலாம்.


1. வயிற்றுப்போக்கு - வசம்பை உரசிக் காலை மாலை கொடுத்து வரக் கட்டுப்படும்.


2. சளி - துளசிஇலைச் சாற்றில் மூன்று, நான்கு துளிகள் தாய்ப்பாலைக் கலந்து கொடுக்க விலகும்.


3. கக்குவான் - பனங்கற்கண்டுடன் சிறிதளவு மிளகைச் சேர்த்துக் கொடுத்து வந்தால் விலகும்.


4. சாதாரணக் காய்ச்சல் - தாய்ப்பாலை ஒரு துணியில் நனைத்துக் குழந்தையின் நெற்றியைச் சுற்றி ஒத்தடம் கொடுத்து வரத் தீரும்.


5. உடம்பு வலி - சிறிய வெங்காயத்தைத் தட்டி இதன் சாற்றைக் கைகால்களில் தேய்த்துவிட வலி குறையும்.


#பொது_மருத்துவம்



ஆண், பெண், குழந்தை எனும் பாகுபாடில்லாமல் மனிதர்களைத் தாக்கும் பொதுவான நோய்கள் இப்பிரிவில் அடங்குகின்றன. அந்நோய்கள் பலவாகும். அவற்றுள் சிலவற்றிற்கான மருந்துகள் வருமாறு :


1. காய்ச்சல் - திராட்சை ரசத்தில் வெந்நீர் கலந்து உண்ண மட்டுப்படும்.


2. பொடுகுத் தொல்லை - வெள்ளை முள்ளங்கிச் சாற்றைத் தலைக்குத் தேய்த்துக் குளித்து வர நீங்கும்.


3. பேன் - துளசிச் சாற்றைத் தலையில் தேய்த்து வரப் பேன் தங்காது.


4. வெட்டுக்காயம் - மஞ்சளைப் பொடி செய்து வெட்டுக்காயத்தில் வைத்துக் கட்டலாம்.


5. முகப்பரு - பூண்டை உரித்து அதன் சதைப் பகுதியை முகத்தில் தேய்த்து வர மறையும்.


#கால்நடை_மருத்துவம்



கால்நடைகளுக்கு உண்டாகும் நோய்களுள் சிலவற்றையும் அவற்றைப் போக்குவதற்கான மருந்துகளையும் கீழே காண்க.


1. புண் புழு - சந்தனத்தையும் சிறிய வெங்காயத்தையும் அரைத்து மாட்டின் புண்ணில் விடப் புழு வெளியேறிப் புண் ஆறும்.


2. ஆட்டிற்கு வயிற்றுப் போக்கு - தேங்காய் எண்ணெய் சிறிதளவைச் சங்கில் எடுத்து ஆட்டுக்குட்டிக்குப் புகட்ட வயிற்றுப் போக்கு நிற்கும்.


3. கோழிகளுக்கு வயிற்றுப்போக்கு - கோழிகளுக்கு விளக்கெண்ணெயைச் சிறிதளவு கொடுக்கச் கழிச்சல் நிற்கும்.



#நாட்டுப்புறமருத்துவத்தின்சிறப்புகள்

பக்க விளைவுகள் இல்லாதது. எளிய முறையில் அமைவது. அதிகப் பொருட் செலவில்லாதது. ஆங்கில மருத்துவத்தில் குணப்படுத்த முடியாத பல நோய்களுக்குக் குணம் தரக்கூடியது. அனுபவ முறையில் பெறப்படுவது. பெரும்பாலும் இயற்கையாகக் கிடைக்கும் பொருள்களை மருந்துகளாகக் கொண்டுள்ளது. சற்று மெதுவாகச் செயல்பட்டாலும் நோய் முழுமையாகக் குணமடைவது. எளிய முறையில் மக்களுக்குப் புரிய வைப்பதால் நோயாளிகள் நோயின் ஆரம்ப கட்டத்திலேயே தடுப்பு முயற்சிகள் செய்துகொள்ள ஏதுவாகிறது. நாட்டு மருத்துவத்தை அறியக் கல்வியறிவு தேவையில்லை, பாமரரும் பின்பற்றலாம். பெரும்பாலும் பரம்பரை பரம்பரையாகப் பின்பற்றப்பட்டு வருவதால் மருத்துவர்கள் நோயைக் கண்டறிவது மிக எளிதாகின்றது. உலக நாடுகளில் நாட்டுப்புற மருத்துவமே நவீன மருத்துவத்துக்கு அடிப்படையான உந்துதலாக அமைந்துள்ளது. உடல் ரீதியாக மட்டும் அணுகாமல் உளரீதியாகவும் அணுகுவதால் நாட்டுப்புற மருத்துவம் சிறப்பானதாக ஆகின்றது.


குறைந்த கார்போஹைட்ரேட் உணவை உண்பதற்கு வழி என்ன?🎙

ஒவ்வொருவரின் உடலும் ஒவ்வொரு விதமாக அமைக்கப்பட்டிருக்கும். ஆகவே உடல் எடை குறைப்பிற்காக அல்லது உடல் வடிவ மாற்றத்திற்காக டயட் இருக்க நினைப்பவர்கள் அவர்களின் உடல் நிலைக்கேற்ப மருத்துவரின் ஆலோசனைப்படி டயட்டை ஆரம்பிக்க வேண்டும்.

லோ கார்போ டயட் என்னும் குறைந்த கார்போ ஹைட்ரட் உணவுகளை எடுத்துக்கொள்ள நினைப்பவர்கள் கீழே கூறப்பட்டிருக்கும் முறைகளை பின்பற்றலாம்.⬇




🌐உங்கள் உணவு பட்டியலில் இருந்து கார்போ ஹைட்ரேட் உணவுகளை தவிர்ப்பது சற்று கடினமான செயல் தான். ஆரம்பத்தில் கடினமாக இருக்கும் இந்த டயட் போக போக பழகி விடும்.⬇




🌐கார்போ அதிகம் உள்ள உணவுகளை முடிந்த அளவு காலை நேரத்தில் உண்ணுவது சிறந்தது. அந்த நாளில் நாம் செய்யும் வேலைகளால் அவை எளிதில் எரியூட்டப்படும். காலை நேரத்தில் உடலில் ஆற்றலும் அதிகமாக தேவைப்படும்.⬇




🌐ஒரேநேரத்தில் முழுமையாக கார்போ உணவுகளை கை விடாமல், ஸ்டார்ச் அதிகமுள்ள உணவுகளை முதலில் குறைக்க வேண்டும்.⬇




🌐முழுமையாக கார்போ உணவுகளை தவிர்ப்பதைவிட , நார்ச்சத்து அதிகம் உள்ள காம்ப்லெக்ஸ் கார்போ உணவுகளை உண்ணலாம்.⬇




🌐பழங்கள், காய்கறிகள் போன்றவற்றில் கார்போஹைட்ரேட்டுடன் ஊட்டச்சத்துகளும் இருக்கும். கலோரிகளும் குறைவாக இருக்கும். ஆகவே பதப்படுத்தப்பட்ட உணவுகளை விட இவை மேலானது.⬇




🌐சர்க்கரை அதிகமாக இருக்கும் கார்போ உணவை சுவைக்க நினைக்கும்போது நீங்களே சமைத்து உண்ண வேண்டும் என்று முறையை பின்பற்றலாம்.⬇




🌐நாள் முழுதும் பசி தெரியாமல் இருக்க புரதம் அதிகம் உள்ள உணவுகளை உண்ணலாம்.⬇




🌐பிஸ்சா உணவை விரும்பி உண்ணுவோர், மாவிற்கு மாற்றாக போர்டோபெல்லோ மஷ்ரூமை பயன்படுத்தி பிஸ்சா தயாரிக்கலாம்.⬇




🌐கார்போ குறைந்த உணவுகளில் பட்டர் மற்றும் சீஸ் அதிகமாக சேர்த்து கொள்ளுங்கள்.குறைந்த கொழுப்பு உணவை முற்றிலும் தவிர்த்திடுங்கள்.பாஸ்தாவை உண்ணுவதை விட spiraliser மூலம் கேரட் போன்ற காய்கறிகளை பாஸ்தா போல் துருவி உண்ணலாம்.குறைந்த கார்போ உணவுகளுடன் முட்டை சேர்த்து உண்ணலாம்.மாவிற்கு மாற்றாக தேங்காய் மற்றும் பாதாம் கொண்டு மாவு தயாரிக்க பழகி கொள்ளுங்கள்.காலிப்ளவரை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.குறைந்த கார்போ ஸ்னாக்ஸ்களை பசிக்கும் போது எடுத்துக் கொள்ளுங்கள்.மைபிலேட் , மை பிட்னெஸ் பால் போன்ற ஆப் களை பார்த்து உணவுகளின் விளக்கங்களை அறிந்து கொள்ளலாம்.காபியை சர்க்கரை இல்லாமல் பால் இல்லாமல் குடிக்க பழகுங்கள்.மிகவும் பிடித்த கார்போ உணவுக்கு மாற்றாக குறைந்த கார்போ உணவை உண்ண தொடங்குங்கள்.ஒரே நேரத்தில் அதிகமான உணவை எடுத்துக் கொள்ளாமல் சிறு இடைவெளியில் குறைந்த அளவு உணவை உண்ணுங்கள்.⬇




🔚மேலே கூறியவை எல்லாமே செய்வதற்கு கடினமான ஒன்று தான். ஆனால் செய்து முடிக்க வேண்டும் என்று நினைத்தால் எளிதில் செய்ய கூடிய ஒன்றாகும்.🏁

உடல் உறுதிக்கு கேப்பையை வாங்கி சாப்புடுங்க |How to maintain good health ...





உடல் உறுதிக்கு கேப்பையை வாங்கி சாப்புடுங்க |How to maintain good health Using Raagi |Organic Living https://youtu.be/2ZSBDinqhW4

கூக்குரல் Tamil Short Film | Kookural | விவசாயி தற்கொலை | வேலையில்லா திண...





கூக்குரல் Tamil Short Film | Kookural | விவசாயி தற்கொலை | வேலையில்லா திண்டாட்டம் | வருமானம் | Takkar https://youtu.be/GUQ8ip46Evk

வாழையிலையில் சாப்பிடுவது இவ்வளவு நன்மையா | How Banana Leaf make food Hea...





வாழையிலையில் சாப்பிடுவது இவ்வளவு நன்மையா | How Banana Leaf make food Healthier | Organic Living https://youtu.be/LxPCIAuiqOU




கொலஸ்ட்ராலை கரைக்கும் இயற்கை வினிகர் | How to remove cholesterol natural...





கொலஸ்ட்ராலை கரைக்கும் இயற்கை வினிகர் | How to remove cholesterol naturally | Organic Living https://youtu.be/7nfCoaCyFBk

செவ்வாய் தோஷமும் அறிவியல் ரகசியமும் ஆரோக்கியமும் | Science Behind Sevvai...





செவ்வாய் தோஷமும் அறிவியல் ரகசியமும் ஆரோக்கியமும் | Science Behind Sevvai Thosham | Organic Living https://youtu.be/p--Fgnf-aGM

Bitcoin - Next level Currency



மேலும் இதை பற்றிய முழு தகவலுக்கு இந்த வீடியோவை பாருங்கள் Click this link -> https://youtu.be/eldRcSJkD0o

உங்களால் முடிந்தால் இதில் ஒரு முதலீடு செய்து வையுங்கள்.. கீழிருக்கும் App ஐ download செய்து கொள்ளுங்கள் எப்போது முடியுமோ invest செய்து கொள்ளுங்கள்


Get bitcoins worth ₹100 free on your first bitcoin buy or sell with referral code 'REF33447601'. Download the app:
http://link.zebpay.com/ref/REF33447601

தலையணையில்லாமல் தூங்கினால் இவ்வளவு ஆரோக்கியம்| How healthy sleeping with...





தலையணையில்லாமல் தூங்கினால் இவ்வளவு ஆரோக்கியம்| How healthy sleeping without Pillow | Organic Living https://youtu.be/5BTh2EmpBqw

👉🎙பெருநகர மக்களை வாட்டும் வைட்டமின் ‘‘டி’’ வைட்டமின் குறைபாடு🎙



✅🔈🔈✅⤵

அதிகாலையில் எழுந்த குறைந்தது அரை மணிநேரமாவது உடற்பயிற்சி செய்வதை விருப்பமாக இல்லாமல் நிர்பந்தமாகவே நினைக்கிறார்கள் இந்தியர்கள்.

நீங்கள் எந்த ஒரு தகுந்த காரணமும் இன்றி தொடர்ந்த உடல் வலி மற்றும் எப்பொழுதும் சோர்வாக இருப்பது போன்று உணருகிறீர்களா? அப்ப’டி’யென்றால், உங்கள் உடல் குறிப்பிடத்தகுந்த அளவு வைட்டமின் ‘‘டி’’ குறைபாட்டால் பாதிக்கப்பட்’டி’ருப்பதற்கான வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது.⤵




⏳சென்னையில் 0 முதல் 80 வயதுவரை உள்ள 1 லட்சத்துக்கும் அதிக எண்ணிக்கையிலான மாதிரிகளின் தரவுகளை ஆய்வு செய்து கடந்த 5 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஒரு விரிவான ஆராய்ச்சி வைட்டமின் ‘‘டி’’ பிரச்சினையின் அதிர்ச்சியூட்டும் அளவை வெளிச்சத்திற்கு கொண்டுவந்திருக்கிறது.⤵




⏳சோதிக்கப்பட்ட பெரும்பாலானவர்கள் (60%) வைட்டமின் குறைபாடு அறிகுறிகளை வெளிப்படுத்தினர். மக்கள் தொகையில் சுமார் 20 சதவீதம் பேருக்கு குறைபாடு இருப்பதாக அறிவிக்கப்பட்’டி’ருந்தாலும். அரிதாக 1% பேர் உயிர்ச்சத்து மிகைப்பு (ஹைப்பர் விட்டமினோஸிஸ்) நோயால் பாதிக்கப்படுகின்றனர்.⤵




⏳16% நபர்கள் மட்டுமே போதுமான அளவில் வைட்டமின் ‘‘டி’’ சத்தை கொண்’டி’ருந்தனர். இருப்பினும் அதிர்ச்சியளிக்கக் கூ’டி’ய விதமாக இந்த பிரிவில் 10 லிருந்து 20 வயதுடைய இளம் பருவத்தினரின் எண்ணிக்கை மிகக் குறைந்து காணப்பட்டது. வைட்டமின் ‘‘டி’’ யின் அவசியத்தை விளக்குகிறார் மருத்துவர் அனிதா சூரியநாராயண்.... ⤵




🌞“சூரியஒளி வைட்டமின்” (சன்ஷைன் வைட்டமின்) என்ற புகழைப்பெற்ற வைட்டமின் ‘டி’ சத்து சூரிய ஒளிக்கு வெளிப்படுத்தப்படும் உடல் தோல்பரப்பின் எதிர்வினையால் தயாரிக்கப்படுகிறது.இயற்கையில் இது மிக அபூர்வமாக நிகழ்கிறது. மற்றப’டி’ மிகக் குறைந்த எண்ணிக்கையில் ஆன உணவுகள் மட்டுமே வைட்டமின் ‘டி’ யின் முக்கிய மூலாதாரமாக கருதப்படுகிறது. ⤵




⏳கொழுப்பில் கரையக்கூ’டி’ய தன்மையைக் கொண்டுள்ள வைட்டமின் ஆதலால் அது உடலின் திசுக்களில் சேமித்து வைக்கப்பட்டு நமது உணவிலுள்ள கால்சியத்தை பயன்படுத்திக்கொள்ள உதவுகிறது. வைட்டமின் ‘டி’ குறைபாடு, அல்லது போதிய அளவு இல்ல்லாதிருப்பது எலும்புச் சுண்ணாம்புப் ப’டி’வம் அடைவதற்கு இட்டுச் சென்று எலும்புகள் வலுவிழக்கும் நோய் உண்டாக காரணமாகிவிடும்.⤵




⏳உதாரணமாக குழந்தைகள் மத்தியில் என்புருக்கி நோய் (ரிக்கெட்ஸ்) பொதுவாக காணப்படுவதற்கு தீவிர குறைபாடு காரணமாகவும் மற்றும் வயதானோருக்கு ஏற்படும் எலும்பு நலிவு(ஆஸ்’டி’யோமலாசியா) மற்றும் எலும்புப்புரை(ஆஸ்’டி’யோபோரோஸிஸ்) ஆகிய நிலைகள் முக்கிய காரணமாகவும் விளங்குகின்றது.⤵




⏳இந்த ஊட்டச்சத்து இயற்கையாகவே பெருமளவு கிடைக்கப்பெறும். நிலையிலுள்ள மக்கள் மத்தியில் அதிகமானோர் இதன் குறைபாட்டால் பாதிக்கப்பட்’டி’ருப்பது கண்டு ஆச்சரியப்படுவது மிக சுலபமே. இந்தியாவில் மட்டுமல்ல அகில உலகிலும் சமீப காலத்தில் ஏற்றம் கண்டுள்ள வைட்டமின் ‘டி’ சத்துக் குறைபாடுக்கு காரணமாக உடலுழைப்புக்குறைவு மற்றும் மூ’டி’ய அறைக்குள் பணிகளை மேற்கொள்ளும் வாழ்க்கை முறை ஆகியவற்றை சுட்’டி’க்காட்டலாம். ⤵




⏳மக்கள் தொகையில் பெரும்பாலானோர் அறைக்குள் மேசைகளில் உட்கார்ந்து பணி செய்வது அவர்களின் உடல் இயக்கத்தை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி சூரிய ஒளிக்கு உடல் வெளிப்படுத்தப்படுவதையும் தவிர்க்கிறது. தற்காலக் குழந்தைகள் காலையிலிருந்து மாலை வரை பந்தை உதைத்து வியர்வை சொட்டச் சொட்ட விளையாடுவதை கைவிட்டு கணினியில் எணணியல் விளையாட்டுக்களை விளையாடத்தொடங்கி விட்டனர். கலப்பட மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை அதிகளவில் உட்கொள்ளுவதும் நமது உடலை வலுவிழக்கச் செய்கிறது. மேலும் அதுவே வைட்டமின் ‘டி’ சத்து சேர்க்கையை குறைவடையச் செய்கிறது. ⤵




⏳இந்தக் குறைபாட்டை அடையாளம் கண்டு ஆரோக்கியக்கேட்டை தவிர்ப்பதற்கு முக்கியமான சவால்களாக திகழ்வது பெரும்பான்மை மக்கள் தாங்கள் இந்த குறைபாட்டால் பாதிக்கப்பட்’டி’ருப்பது குறித்து எந்த வித விழிப்புணர்ச்சியும் இன்றி இருப்பதுதான். மக்கள் வெகு சுலபமாக அதன் அறிகுறிகளான களைப்பு மற்றும் உடல்வலி ஆகியவற்றுக்கு மனஅழுத்தம்தான் காரணம் என்று புறக்கணித்து விடுகிறார்கள்.⤵




⏳இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஆய்வுகளில் சூரிய ஒளிக்கு 30 நிமிடங்களுக்கு தங்களை வெளிப்படுத்திக்கொண்டாலும் உடலுக்குத் தேவையான அளவு வைட்டமின் ‘டி’ சத்து கிடைப்பதில்லை என்று கண்டுபி’டி’க்கப்பட்டுள்ளது. இதற்கு விடையளிக்கும் மற்றும் ஒரு கோட்பாடாக கருதப்படுவது என்னவென்றால் நமது இனம் சார்ந்த கருமை நிறமும் அதன் காரணமாகவே அதிகளவில் பயன்படுத்தப்படும் சூரியக்கதிர்களை தடுக்கும் பொருட்களும்அ’டி’ப்படைக் காரணங்கள் எதுவாக இருந்தாலும் வைட்டமின் ‘டி’ ஊட்டச்சத்து ஏற்றம் பெற்ற துணை உணவுப் பொருட்களை எடுத்துக்கொள்ளுவதன் தேவை தெளிவாகத் தெரிகிறது. ⤵




⏳வைட்டமின் ‘டி’ சத்தை அதிகமாக தன்னுள் கொண்ட சில உணவு வகைகளாவன மீன், மாட்டு ஈரல், முட்டை மஞ்சள் கரு, ஆகியவை. இது தவிர சைவ உணவு உட்கொள்ளுபவர்கள் பாதாம் பால், சேயாபால், ஆரஞ்சுப் பழச்சாறு, நவதானியங்கள், மற்றும் காளான் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம்.⤵




⏳நவீன நகர வாழ்க்கை முறை சரியான உணவுகளை உட்கொள்ள நம்மை அனுமதிப்பதில்லை. அல்லது வைட்டமின் ‘டி’ சத்தை உருவாக்க தேவையான சூரிய ஒளியை பெறுவதற்கு நமக்கு நேரத்தை அளிக்காது ஆகவே , விட்டமின் ‘டி’ குறைபாடு அல்லது அளவு குறைந்திருக்கிறதா என்று .சோதனை செய்து கொண்டு அந்த நிலையை சீர்படுத்த மருத்துவ உதவியை நாடுவது மிக முக்கியமான ஒன்றாகும்.🏁

மூலிகைகளும் அதன் சத்துக்களும்



1. அத்தி - இரும்புச்சத்து

2. அம்மான் பச்சரிசி - வெள்ளிச்சத்து

3. அக்கிரகாரம் – செம்புச்சத்து

4. ஆத்தி – இரும்புச்சத்து, தாமிரச்சத்து

5. ஆவாரம் – செம்புச்சத்து

6. ஆரைக்கீரை – இரும்புச்சத்து

7. ஆவாரை, ஆடாதொடா, கற்றாழை, – தாமிரச்சத்து

8. ஊமத்தை – இரும்புச்சத்து, உப்புச்சத்து

9. எட்டி – இரும்புச்சத்து, கந்தகச்சத்து

10. எள்ளு, கடுகு – கந்தகச்சத்து

11. கத்திரிக்காய் – மெக்னீசியம்

12. கரிசலாங்கண்ணி – தங்கச்சத்து, வெள்ளிச்சத்து

13. கருவேப்பிலை – இரும்புச்சத்து

14. கீழாநெல்லி – காரீயச்சத்து

15. கோபுரந்தாங்கி – தங்கச்சத்து

16. கோவைஇலை – கால்சியம், பாஸ்பரஸ், போரான், இரும்புச்சத்து

17. சங்கு, நாரயணசஞ்சீவி – சுண்ணாம்புச்சத்து, செம்புச்சத்து

18. செந்தொட்டி – செம்புச்சத்து, கந்தகச்சத்து

19. தும்பை – செம்புச்சத்து

20. துத்தி – கால்சியம்

21. தூதுவளை – ஈயச்சத்து

22. நன்னாரி – இரும்புச்சத்து

23. நிலவாகை – தங்கச்சத்து, கந்த்கச்சத்து, ஈயச்சத்து

24. பற்பாடகம் – கந்தகச்சத்து

25. பிரம்மத்தண்டு – தங்கச்சத்து

26. பிரண்டை – உப்புச்சத்து

27. புதினா – இரும்புச்சத்து

28. பெரும்தும்பை – தங்கச்சத்து

29. பொன்னாங்கண்ணி – இரும்புச்சத்து, ஈயச்சத்து, செம்புச்சத்து

30. மணத்தக்காளி – இரும்புச்சத்து, கால்சியம் சத்து

31. முசுமுசுக்கை – சுண்ணாம்புச்சத்து, தாமிரச்சத்து

32. முருங்கை – இரும்புச்சத்து

33. வெள்ளை அருகு – ஈயச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உப்புச்சத்து

34. வெண்டைக்காய் – அயோடின்.

35. நுணா – தாமிரச்சத்து

ஒரு வரியில் இயற்கை மருத்துவம் பற்றி தெரிந்து கொள்வோம்

01. வரட்டு இருமலுக்கு சிறந்தது திராட்சை.!

02. முதுகுத்தண்டு வலிக்கு பாப்பாளிப்பழம் சாப்பிடு!

03. இரத்த அழுத்தம் குறைய எலுமிச்சை!

04. மூளைக்கு வலியூட்ட வல்லாரை!

05. காது மந்தம் போக்கும் தூதுவளை!

06. மூத்திரக்கடுப்பு மாற்ற பசலைக் கீரை!

07. பித்த மயக்கம் தீர புளியாரை!

08. உடற் சூடு அகல முருங்கைக் கீரை!

09. நீரிழிவு நோய்க்கு துளசி இலை!

10. இரத்தத்தை சுத்திகரிக்க வெள்ளைப்பூடு!

11. கண் பார்வை அதிகரிக்க கரட், புதினா, ஏலக்காய்!

12. கடுமையான ஜலதோசத்திற்கு தேனும் எலுமிச்சையும்!

13. வாழ்நாளை நீடிக்க நெல்லிக்கனி!

14. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வெந்தயம்!

15. கொழுப்புச் சத்தை மிளகு குறைக்கும்!

16. இளைத்த உடல் பெருக்க மிளகு!

17. பொடுகைப் போக்க தயிரில் குளி!

18. மூலநோய்க்கு கருணைக்கிழங்கு!

19. இதயப் பலவீனம் போக்க மாதுளை!

20. வெள்ளை வெட்டை தீர அன்னாசி!

21. காதுவலி தீர எலுமிச்சம் சாறு நாலு துளி காதில் விடுக!

22. பீனீசம் தலைவலி நீங்க மிளகுப் பொடியுடன் வெல்லம் சேர்த்து உண்!

23. பொன்னாங்காணி உண்டால் நோய் தணிந்து உடல் தேறும்!

24. வாழைத்தண்டு சிறு நீரகக்கற்களை கரைக்கும்!

25. மலத்தை இளக்கும் ரோஜா இதழ்கள்!

26. மாதுளம் பிஞ்சு பேதியை நிறுத்தும்!

27. கருப்பை நோய்க்கு வாழைப்பூ!

28. ஜீரண சக்தியை அதிகரிக்கும் மிளகும் இஞ்சியும்!

29. மூளைக்கு வலுவூட்டுவது பேரிச்சம்பழம் பாதாம் பருப்பு!

30. மருதோன்றி வேர்ப்பட்டையை அரைத்துக்கட்ட கால் ஆணி குணமாகும்.!

நோய் தீர்க்கும் மூலிகை மருந்துகள்



அதிமதுரம்

Glycyrhiza Glabra

தீரும் நோய்கள்: இருமல், வயிற்றுப்புண், பசியின்மை, சுவையின்மை, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல்.




அமுக்கராக் கிழங்கு

Withania Somnifera

தீரும் நோய்கள்: உடல் எடை அதிகரிக்க, உடல் அசதி, மூட்டுவலி, தூக்கமின்மை.




அசோகு

Saraca Indica

தீரும் நோய்கள்: கருப்பை நோய்கள், சூதக வலி, மாதவிடாய் போக்கு, வெள்ளைப்படுதல்.




அம்மான் பச்சரிசி

Euphorbia Hirta

தீரும் நோய்கள்: முகப்பரு, முகத்தில் எண்ணெய்ப் பசை, கால் ஆணி, பித்த வெடிப்பு, இரைப்பு, தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க.




அருகம்புல்

Cynodon Dactylon

தீரும் நோய்கள்: இரத்தம் சுத்தமாக, வியர்வை நாற்றம், உடல் அரிப்பு, நமைச்சல், வெள்ளைப்படுதல்.




அரிவாள்மனை பூண்டு

Sida Acuta

தீரும் நோய்கள்: காயங்கள், புண்களுக்கு களிம்பு செய்து பூச.




அவுரி

Indigofera Tinctoria

தீரும் நோய்கள்: பாம்புக்கடிக்கு முதலுதவி, காமாலை, தோல் நோய்கள், ஒவ்வாமை (அலர்ஜி).




ஆடாதோடை

Adhatoda Zeylanica

தீரும் நோய்கள்: சளி, இருமல், தொண்டைக் கட்டு.




ஆடுதீண்டாபாளை

Aristolochia Bracteolata

தீரும் நோய்கள்: தோல் நோய்கள், சிரங்கு, கரப்பான், வண்டுக்கடி ஆகியவைகளுக்கு மேல் பூச்சு.




ஆரை

Marselia Quadrifida

தீரும் நோய்கள்: சிறுநீர்க்கட்டு, சிறுநீர் எரிச்சல்.




ஆவாரை

Cassia Auriculata

தீரும் நோய்கள்: நீரிழிவு, மேக நோய்கள், நீர்கடுப்பு, உள்ளங் கால் எரிச்சல், சிறுநீர் எரிச்சல், வெள்ளைப்படுதல்.




இஞ்சி

Zingiber Officinale

தீரும் நோய்கள்: பசியின்மை, செரியாமை, வயிற்றுப் பொருமல், தொண்டைக் கம்மல்.




இம்பூரல்

Oldenlandia Umbellata

இரத்த வாந்தி, மாதவிடாய் போக்கு கட்டுபடுத்த.




உத்தாமணி (வேலிப்பருத்தி)

Pergularia Daemia

தீரும் நோய்கள்: குழந்தைகளுக்கு செரியாமை (அஜீரணம்), மாந்தம், வயிற்றுப் பொருமல் ஆகியவைகளுக்கு.




உத்திராட்சம்

Elaeocarpus Scarius

தீரும் நோய்கள்: குழந்தைகளுக்கு தொண்டைக்கட்டு, இடைவிடாத விக்கல், கோழை.




ஊமத்தை

Datura Metel

தீரும் நோய்கள்: புண்களுக்கு வெளிப்பூச்சு மட்டும்.




எருக்கன்

Calotropis Gigantea

தீரும் நோய்கள்: தேள், குளவி, பூச்சிகளின் விஷக்கடி, கட்டிகளுக்கு மேல் பூச்சு.




எள்

Sesamum Indicum

தீரும் நோய்கள்: உடற்சூடு, தலைப் பாரம் குறைய.




ஏலக்காய்

Elettaria Cardamomum

தீரும் நோய்கள்: அஜீரணம், குமட்டல், வாந்தி.




ஓதியன்

Lannea Coromandelica

வாய்புண், குடல்புண், இரத்தக்கழிச்சல், பேதி.




ஓமம்

Carum Roxburghianum

தீரும் நோய்கள்: மூக்கடைப்பு (Running nose), பீனிசம்.




ஓரிதழ் தாமரை

Hybanthus Enneaspermus

தீரும் நோய்கள்:சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், வெள்ளைப்படுதல்.

எல்லா நோய்க்கும் ஒரே மருந்து முப்பு | Muppu Medical Miracle | Organic Li...





எல்லா நோய்க்கும் ஒரே மருந்து முப்பு | Muppu Medical Miracle | Tamil siddha medicine | Organic Living

புரட்டாசி மாதமும் அசைவமும் விஞ்ஞான ரகசியமும் | Why No Non Veg in Puratta...





புரட்டாசி மாதமும் அசைவமும் விஞ்ஞான ரகசியமும் | Why No Non Veg in Purattasi |  Organic Living https://youtu.be/VNWpWBkRuNU

"Water Water Water" Award Winning Short Film | Niruban Chakravarthi | Takkar

From the year of 2000 till 2040 how water is sufficient....Please watch and Share

A Short film that took 25 Minutes to Think, Make, Edit and Publish
Concept , Camera, Editing :  Niruban Chakravarthi




மேலே உள்ள காணொளியை பாருங்கள்

கண்ணீரையாவது சேமித்து வை, தண்ணீர் துளிகாக அழும் காலம் வரும் அப்போது தாகம் தீர்த்துக்கொள்ள உதவும்.... 
                                                                                                                நிருபன் சக்ரவர்த்திதண்ணீர்! தண்ணீர்!!


பலருக்கு தாகம் தீர்க்கும் தண்ணீர்


சிலருக்கு ஒருநேர பசியைத் தீர்க்கிறது


நீரின்றி அமையாது உலகு,


உண்மைதான்,


பஞ்சம் தண்ணீருக்கு மட்டுமல்ல அதனால்

கண்ணீருக்கும் தான்


ஆற்றிலும் ஓடையிலும் பார்த்த நல்ல தண்ணீரை


இன்று பாட்டிலிலும் பாக்கெட்டிலும் பார்க்கும் அவலம்,


நாளை தலைமுறை எதில் பார்க்கும்?


காடுகளை காத்து மரங்களை வளர்த்து


மனிதத்தோடு தாவரங்களையும் காப்போம் என இந்நாளில் உறுதி ஏற்போம்,!!!

உமிழ் நீர் நம் உயிர் காக்கும் அமிர்தம் | Use Saliva and Protect Life | ...





உமிழ் நீர் நம் உயிர்  காக்கும் அமிர்தம் | Use Saliva and Protect Life | Health Tips | Organic Living https://youtu.be/2SxQY4Twblw

மூட நம்பிக்கைகளின் உண்மை அர்த்தங்கள்

நம் மக்களிடையே ஆண்டாண்டு காலமாக பல மூட நம்பிக்கைககள் பரவலாக இருந்து வருகிறது. ஏன் செய்கிறீர்கள்? எதற்கு ? என்னவென்று காரணம் கேட்டால், அதற்கு சாஸ்திரத்தையும், ஆன்மீகத்தையும் பதிலாய் சொல்கிறார்கள். அப்படி பின்பற்றி வரும் சில மூட நம்பிக்கைகளில் சிலவற்றை இணையத்தில் படித்து உண்மையான காரணங்களை எழுதியுள்ளேன்.


1.) பாம்பு புற்றுக்கு பால் ஊற்றுவது ஏன் ?

பாம்பு புற்றுகள் பெரும்பாலும் அம்மன் கோவில்களில் இருக்கும். மேலும் பாம்புக்கு பாலும் முட்டையும் பிடிக்கும். நாம் அதை வைத்து படைத்தால் , முட்டையையும் பாலையும் குடித்து விட்டு, நாம் வேண்டிக்கொண்டதை நிறைவேற்றும். இதைதான் நாம் பல படங்களிலும் பார்த்துள்ளோம்.

உண்மை காரணம் - ஆதி காலத்தில் நாடெங்கும் புதர்களும், காடுமாய் இருந்தது. மனிதன் நடமாட்டத்தை விட பாம்புகளின் நடமாட்டம் அதிகமாக இருந்தது. பெண் பாம்புகளின் மேல் ஒரு வித திரவ வாசம் வரும். அதை வைத்து கொண்டு ஆண் பாம்புகள் இனப்பெருக்கத்திற்காக வரும். பாம்பின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த எண்ணி, முட்டையும் பாலும் அதன் புற்றில் ஊற்றினார்கள். இவை இரண்டுக்கும் பாம்பின் மேல் வரும் அந்த வாசத்தை போக்கும் திறன் உண்டு. அதனால் தான் பாம்பு புற்றிற்கு பால் ஊற்றுகிறார்கள். உண்மையில் பாம்புகள் பாலை குடிக்காது.


2.) மாலை நேரத்தில் ஏன் வீடு பெருக்க கூடாது ?

மாலை நேரத்தில் வீட்டை பெருக்கினால், வீட்டுக்கு நல்லதல்ல. துர்தஷ்டம் வந்து சேரும் என நம்பிக்கை. அதேபோல் மாலை நேரத்தில் நகம் வெட்டினாலும், வீட்டுக்கு தரித்திரம் வந்து சேரும் என சொல்வதுண்டு.

உண்மை காரணம்- மின்சாரம் கண்டுபிடிக்காமல் இருந்த காலத்தில், மாலை நேரத்தில், இருட்டிய பின் வீட்டை பெருக்கினால் குப்பைகளோடு ஊசி, தோடு/திருகாணி போன்றவை ஏதாவது சேர்ந்து காணாமல் போக வாய்ப்புண்டு. அதுமட்டுமல்லாமல் நகம் வெட்டி கூட்டி பெருக்கும் போதும் முக்கிய பொருட்கள் குப்பைக்கு போகவும் வாய்ப்புண்டு. அதனால் தான் மாலை நேரத்தில் வீடு பெருக்க கூடாது என சொல்வார்கள்.

3.) இருட்டிய பின் ஏன் பூப்பறிக்க கூடாது ? 

மாலை நிறத்தில் இருட்டிய பின் செடியிலிருந்து பூப்பறித்தால், வீட்டுக்கு கெட்டது நடக்கும் என சொல்வார்கள்.

உண்மை காரணம்- மாலை நிறத்தில் இருட்டிய பின், செடி கொடிகளில் பூச்சி, பாம்பு, தேள் போன்றவை இருக்கலாம். அதனால் மக்களின் உயிருக்கு ஆபத்து வர கூடாது என்பதற்காக இருட்டில் பூப்பறிக்க கூடாது என சொல்லியிருப்பார்கள்.

4.) சாவு வீட்டுக்கு சென்று வந்த பின் ஏன் குளித்துவிட்டு பின்வாசல் வழியே வர வேண்டும் ?

சாவு வீட்டுக்கு சென்று வந்த பின் கண்டிப்பாக குளிக்க வேண்டும். இல்லாவிடில் அந்த தீட்டு நமக்கும் ஓட்டி கொள்ளும்.

உண்மை காரணம்- முன்பெல்லாம் ஒருவர் இயற்கையாகவோ/செயற்கையாகவோ இறந்திருந்ததால், உடலை வீட்டில் அப்படியே தரையில் துணி விரித்து போட்டு வைத்திருப்பார்கள். இறந்த உடலிலிருந்து நிறைய நுண்ணுயிர்கள்/கிருமிகள் வந்தவர்களையும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாய் உள்ளவரையும் பாதிக்கும். அதனால் தான் சாவு வீட்டுக்கு போய் வந்தால் குளித்துவிட்டு சுத்தமாக இருக்க வேண்டும். அது சரி.. அது ஏன் கொல்லைப்புறமாக வரவேண்டும் ? முன்பு, குளியலறை வீட்டுக்கு வெளியே கொல்லைப்புறத்தில் தான் இருக்கும். அல்லது வெட்ட வெளியில் கொல்லையில் தான் குளிப்பார்கள். அதனால் பின் வாசல் வழியே குளித்துவிட்டு வீட்டுக்குள் போவார்கள்.

5.) பூனை குறுக்கே வந்தால் ஏன் கெட்ட சகுனம் ?

வெளியே போகும் போது பூனை குறுக்கே வந்தால் கெட்ட சகுனம். போகிற காரிய தடைப்படும். மீண்டும் உள்ளே சென்று சிறிது நேரம் கழித்து கிளம்ப வேண்டும்.

உண்மை காரணம்- அக்காலத்தில் ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு போக காட்டு பாதை வழியேதான் போக வேண்டும். காட்டுப்பூனை, சிறுத்தை, புலி போன்ற மிருங்கங்கள் போகும் வழியில் குறுக்கே கடந்து போகும். இப்பூனை வகையறாவை சேர்ந்த மிருகங்களுக்கு ஒரு பழக்கம் உண்டு. பாதையின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கம் போகும் போது ஒருமுறை நின்று பார்த்து விட்டு தான் கடக்கும். இரையை தேடி கொண்டே போகுமாம். அதனால் தூரத்தில் இப்பூனைகளை கண்டாலோ/ வழியில் வந்தாலோ/கடந்தாலோ திரும்பி போய் விடுவார்கள். அந்த காரணம் தான் இக்காலத்தில் மருவி இப்படி ஆகிவிட்டது.


6.) தும்மினால் கெட்ட சகுனம்- 

நல்ல காரியம் செய்யும் போதோ/வெளியே செல்லும் போதோ தும்மல் வந்தால் அபசகுனம்.

உண்மை காரணம்- தும்மல் ஒரு சாதாரண இயற்கை செயல். ஒருவர் தும்மினால், அவருக்கு உடம்பு சுகமில்லை என கருதி கசாயமோ அல்லது சீரக வெந்நீரோ தருவது பண்டைய வழக்கம். வெளியே போகும் போது தும்மினால், உடம்பு சுகமில்லை போகவேண்டாம் என்றும் சொல்லியும், ஒரு சொம்பு வெந்நீர் கொடுத்து அனுப்புவதையம் வழக்கமாக்கி கொண்டுள்ளனர். அதைதான் நாம் அபசகுனம் என்று மாற்றியுள்ளோம். (இப்படி தான் இருந்திருக்கும் என நானே யோசித்து எழுதியது).



7.) புரட்டாசி மாதம் ஏன் மாமிசம் சாப்பிட கூடாது ?

புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு விசேஷ மாதம். அதனால் பெருமாளுக்கு நோன்பு நோற்று விரதம் எடுத்து, மாமிசம் சாப்பிடாமல் இருக்க வேண்டும்.

உண்மை காரணம்- புரட்டாசி மாதத்தில் வெயிலும் இல்லாமல், மழையும் இல்லாமல் பருவ நிலை மாறும் காலம். இம்மாதத்தில் அசைவ உணவை சாப்பிட்டால், உடல் சூடேறி உபாதைகள் வர நேரிடும். அதனால் தான் மாமிச உணவை தவிர்த்து, ஒரு பொழுது உணவை (அளவாக) சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாய் இருக்கும் என பின்பற்றினார்கள். இதில் பெருமாள் எப்படி வந்தார் என சத்தியமாய் எனக்கு தெரியாது!

8.) ஏன் இரவில் அரச மரத்தடியே படுக்கக் கூடாது ?

இரவு நேரத்தில் அரச மரத்தடியே படுத்து தூங்கினால், காத்து கருப்பு அடித்து விடும் என சொல்வார்கள்.

உண்மை காரணம்- அரசமரம் பகலில் கரியமில வாயுவை எழுத்து கொண்டு, பிராண வாயுவை விடும். ஆனால் இரவில் பிராண வாயுவை எழுத்து கொண்டு, கரியமில வாயுவை வெளியிடும். மரத்தடியில் இரவில் தூங்குபவர்கள் கரியமில வாயுவை சுவாசித்தால், மூச்சு திணறல் ஏற்படும், உயிர் போகவும் வாய்ப்புண்டு. அதனால் தான் இரவில் அரச மரத்தடியே படுக்க கூடாது என சொல்லி வைத்தார்கள்.

9.) மொய் வைக்கும் போது ஏன் ஒற்றைப் படையில் (101 ருபாய் , 501 ருபாய், 1001 ருபாய்) மொய் வைக்கிறார்கள்?

ஒற்றைப் படையில் மொய் வைப்பது தான் சம்பிரதாயம். அப்படி தான் வைக்க வேண்டும்.

உண்மை காரணம்- இரட்டைப்படை எண்ணை எளிதில் வகுக்க முடியும். அப்படி வகுத்தால் மீதம் (remainder) பூஜியமோ அல்லது perfect number தான் வரும். ஆனால் ஒற்றைப் படை எண்ணை வகுத்தால் பூஜ்யம் வராது. அதுமட்டுமல்லாமல் decimal ஆக தான் வரும். இது போல கணவன் மனைவி பிரியாமல், யாராலும் பிரியப்படாமல் இருக்க வேண்டும் என்று சொல்வதுண்டு. உதாரணம்: (100/2=50) , (101/2=50.5)



10.) உப்பை கொட்டினால் வீட்டுக்கு கடன் வந்து சேரும்

வீட்டில் உப்பை கொட்டினால் வீட்டுக்கு கடன் வந்து சேரும்.

உண்மை காரணம்- பழங்காலம் முதல் உப்பு மருத்துவம் மற்றும் சமையலில் மிக முக்கியமான பொருள் ஆகும். பண்ட மாற்று முறையிலும் உப்பு மிக முக்கியமானது. அதனால் அதை பத்திரமாக பாதுகாத்து கொள்ள வேண்டி சொல்லியிருப்பார்கள்.

வலது காலை முன் வைத்து செல்வது ஏன் ?

மனிதனின் உடல் வலம், இடம் என்று இரு பாகங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. 
வலது பக்கத்தில் அமைந்துள்ள கண், காது, மூக்கு, புஜம், கை, துடை, கால் ஆகிய உறுப்புகளுக்கு உடலில் இடப் பக்கத்தில் அமைந்துள்ள உறுப்புகளைக் காட்டிலும் சற்று பலமும், வலிமையும், புண்ணியமும் அதிகமாக இருக்கும் என்கிறது வேதம். 
இதை இன்றைய விஞ்ஞானமும் உறுதிப்படுத்துகிறது.
அதாவது, நம் உடலைச் சுற்றிலும் இரு வேறு காந்த வளையங்கள் உள்ளன. 

அவற்றில் முதலாவது, கால் பகுதியிலிருந்து தலைப்பகுதிக்கும், தலைப் பகுதியிலிருந்து கால் பகுதிக்கும் வலமாகச் சுற்றுகிறது. 

இரண்டாவது காந்த வளையம் உடலின் இடது பாகத்திலிருந்து உடலில் முன் பகுதி வழியாக, வலது பக்கத்துக்கும், வலப்பகுதியிலிருந்து பின்பகுதி வழியாக இடது பக்கத்துக்கும் வலமாகச் சுற்றுகிறது. 

ஆகவே, காந்த வளையத்தின் திசைக்கேற்றவாறு உடல் அசையும்போது காந்த வளையத்தின் சுருள்கள் இறுகுகின்றன. 

எதிராக அசையும்போது சுருள் தொந்துபோய் உடல் இயந்திரத்தின் செயல்திறன் தளர்வடையச் செய்கிறது. 

ஆகவே, உடலின் இடப் பகுதியைக் காட்டிலும் வலப்பகுதிக்கு செயல்திறன் அதிகம் என்கிறது நவீன மின் இயல்.

இதை ஒட்டியே நமது மகரிஷிகளும் எந்த நல்ல செயலைச் செய்யும்போதும், வலது பகுதியிலுள்ள வலக்கை போன்றவற்றால் செய்ய வேண்டும் என்று சொன்னார்கள், புத்தம் புதிதாக ஒரு வீடு கட்டி, அந்த வீட்டுக்கு கிரகப்பிரவேசம்(புதுமனைப் புகுவிழா) நடத்தும் போது, அந்த வீட்டுக்குத் தலைவியான குடும்பப் பெண் வீட்டுக்குள் (வாசல் நிலையைத் தாண்டி அமைந்துள்ள பகுதியில்) நுழையும்போது, தனது வலது காலை வைத்து நுழைய வேண்டும். 

இதனால் வீட்டிலுள்ளவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
இவ்வாறே, திருமணம் முடிந்து முதல் முதலாக புகுந்த(கணவன்)வீட்டுக்குள் நுழையும் மணப் பெண்ணும், நுழையும்போது முதலில் தனது வலது காலை வீட்டுக்குள் வைத்து நுழைய வேண்டும். 

இதனால் அந்த வீட்டில் அந்தப்பெண்ணின் வாழ்க்கை மகிழ்ச்சியானதாக அமையும்.

நரம்பு மற்றும் எலும்பு சம்பந்தமான பிரச்னைகளிலிருந்து விடுபட எந்த விதமான தெய்வ வழிபாடு மற்றும் பரிகாரங்கள் மேற்கொள்ள வேண்டும்?
நரம்புக்கு அதிபதி சூரியன். 

சூரியன் பலமிழந்து துலா ராசியில் சஞ்சரிக்கும் மாதமான ஐப்பசி மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு நரம்பு சம்பந்தமான ஒற்றைத் தலைவலி போன்ற நோய்கள் உருவாக வாய்ப்புண்டு. 

இப்படிப்பட்ட நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னைக்கு கண்ணுக்குத் தெரியும் கடவுளான சூரியனை வழிபட வேண்டும்.

அதாவது, ஒவ்வொரு நாளும் சூரியன் உதிக்கும் அதிகாலை நேரத்தில், கிழக்கு திசையை நோக்கி, தரையில் படுத்து எழுந்திருந்து, தரைப்பகுதியில் நமது உடல் உறுப்புகள் அனைத்தும் படுமாறு பன்னிரண்டு முறை நமஸ்காரம் செய்து வரலாம். 

இதற்கு மந்திரமோ ஆசாரம் போன்ற எந்த ஒரு கட்டுப்பாடோ தேவையில்லை.

தினசரி முடியாவிட்டாலும் ஞாயிற்றுக் கிழமையன்றாவது காலை ஆறு மணிக்கு இவ்வாறு 12 முறை சூரிய நமஸ்காரம் செய்து வந்தால் நோய் அண்டாது. குறிப்பாக, நரம்பு சம்பந்தமான பிரச்னைகள் தோன்றாது.
இவ்வாறு நமஸ்காரம் செய்ய முடியாதவர்கள், தான் தரையில் அமர்ந்து கொண்டு, தனக்காக மற்றவர்களை விட்டு சூரியனை நோக்கி (சூரிய நமஸ்கார மந்திரங்கள் சொல்லி) நமஸ்கரிக்கச் சொல்லலாம்.
அத்துடன் சூரிய சம்பந்தமான ஆதித்ய ஹ்ருதயம், கோளாறு பதிகம் போன்ற தோத்திரங்களை பாராயணம் செய்யலாம். உபதேசம் ஆனவர்கள் முறையாக சந்தியாவந்தனம் செய்து காயத்ரீ மந்திரத்தை ஜபிக்கலாம். 

சூரியன் அருளால் நரம்பு சம்பந்தமான நோய்கள் உட்பட அனைத்து நோய்களும் விலகி ஆரோக்கியம் கிட்டும்.

திருமணத் தடைக்கு என்ன பரிகாரம் செய்யலாம்?
திருமணம் என்பது மனிதனின் வாழ்க்கையில் நடைபெறும் முக்கியமான நிகழ்வு. இதற்கு மனித முயற்சியைவிட தெய்வ அருளே அதிகமாகத் தேவை. தனது சக்திக்குத் தக்கவாறு இஷ்ட தெய்வங்களையும் குல தெய்வத்தையும் வழிபட்டுக் கொண்டு வந்தால், தக்க காலத்தில் திருமணம் கைகூடும்.
பல காலமாக திருமணம் கைகூடாதவர்கள் அதற்காக சில புண்ணியச் செயல்களைச் செய்யலாம். 

குறிப்பாக, திருமணம் ஆகியும் தன்னந்தனியே பிரிந்து வாழும் கணவனையும் மனைவியையும் ஒன்று சேர்த்து வைக்கலாம். 

இதனால், திருமண வாழ்க்கை விரைவாக இன்பமாக அமையும்.

‘புண்ணியமான செயல்களிலேயே அதிகமான புண்ணியம் தரும் செயல் ஓர் ஆணையும் பெண்ணையும் ஒன்றாக இணைத்து வைக்கும் செயல்தான்’ என்கிறது சாஸ்திரம். 

ஆகவே, பணம், பதவி, புகழ் போன்றவற்றுக்கு ஆசைப்படாமல், தன்னலமின்றி ஓர் ஆணுக்கோ பெண்ணுக்கோ இரு வீட்டார் தொடர்பு சம்மதத்தோடு, திருமணத்தை ஏற்பாடு செய்து முடித்து வைப்பதால் தங்கள் குடும்பத்திலுள்ள குழந்தைகளுக்கு காலத்தில் திருமணம் நடைபெறும்.

 இதில் சந்தேகமில்லை.

மேலும், திருமணம் ஆன பின்னர், ஏதோ சிற்சில மனக்குறைகளால் தனிமையில் பிரிந்து வசிக்கும் கணவனையும் மனைவியையும் தொடர்பு கொண்டு இருவரிடமும் பேசிப்பழகி அவர்களுக்குள் ஒரே கருத்துக்களை உருவாக்கி, பிரிந்த தம்பதிகளை ஒன்றாக இணைத்து வைப்பவர்களின் குடும்பத்தில் திருமணத்தடையே ஏற்படாது. 

ஆனால், இந்தச் செயலை தன்னலமின்றி, எதையும் எதிர்பார்க்காமல் செய்ய வேண்டும்.

ஆகவே, சுயநலமின்றி ஓர் ஆணையும் பெண்ணையும் ஒன்றாக இணைத்து வைப்பதே சிறந்த புண்ணியம் என்பதும், திருமணம் செய்து கொண்டு ஒற்றுமையுடன் வாழும், கணவனும் மனைவியும் பிரிந்து வாழக் காரணமாக இருப்பதே மிகப்பெரும் பாவச் செயல் என்பதும் இதன் மூலம் புலப்படுகிறது.

நினைப்பதையும் கேட்பதையும் கொடுக்கும் கண்ணாடி |Mirror gives whatever we a...





நினைப்பதையும் கேட்பதையும் கொடுக்கும் கண்ணாடி |

Mirror gives whatever we ask and think|Organic Living https://youtu.be/KRiFdaPrIzE

பிராணிக் ஹீல்லிங் மூலம் நோய்களை குணப்படுத்துவது எப்படி | What is Pranic ...




பிராணிக் ஹீல்லிங் மூலம் நோய்களை
குணப்படுத்துவது எப்படி | What

is Pranic Healing | Organic Living https://youtu.be/GufPcN1s9co

Updated List of (Tamil Health Tips)Organic Living Videos Please Watch

நண்பர்களே...... "Organic Living" YouTube channel ஐ subscribe செய்து பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள இந்த link ஐ click செய்து subscribe என்ற buttonஐ அழுத்துங்கள்.... இது உங்கள் ஆரோக்கியத்தை வளர்த்திக்கொள்ளும் சாவி - https://www.youtube.com/c/OrganicLiving?sub_confirmation=1


நம் வாழ்க்கையில் ஆரோக்கியம் மிக முக்கியம் , இதில் எங்களது 180 காணொளிகள் உள்ளன, கண்டிப்பாக உங்கள் வாழ்க்கைக்கு இது தேவைப்படும். எனவே இதில் இருக்கு ஒவ்வொரு காணொளியும் பார்த்து உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள் நண்பர்களே ப்ளீஸ்

1. 8 வடிவ நடைப்பயிற்சியின் அற்புத பயன்கள் | 8 walk Health Benefits | Organic Living | Tamil Health Tips https://youtu.be/nqpYx4SgxCo

2. கடலை சாப்பிடுவதால் ஏற்படும் குழந்தை பாக்கியம்| Groundnuts Health Benefits| Organic Living https://youtu.be/L6DynZk5fuE

3. மழையில் நனைந்தால் நோய்கள் பறந்துபோகும் | Wet in Rain to get well soon | Organic Living | Health Tips https://youtu.be/OY4FiDyTSgE

4. Happy Teacher Day | ஆசிரியர் தின வாழ்த்துக்கள் | Organic Living https://youtu.be/66kPG-p4wpY

5. நல்ல தூக்கத்திற்கு தூங்கும் முன் செய்ய வேண்டியவை | Things to do before Sleep | Organic Living https://youtu.be/ae03pfRUo4Q

6. செலவில்லாமல் உடல் கோளாறுகளை சரி செய்வது எப்படி | How to Cure Disease without Money | Organic Living https://youtu.be/ZD0Da4te6CE

7. நவபாசானமும் மிக பெரிய மருத்துவ ரகசியமும் | Secret of Navabasanam | Bogar Saint | Organic Living https://youtu.be/5PEUN0SjkJ4

8. ருத்ராட்சையால் குணமாகும் நோய்கள் | Rudhraksha Health Benefits | Organic Living https://youtu.be/npUGjAZu8qo


9. விவசாயி ஒரு விஞ்ஞானி | Farmer is a Scientist | Organic Living | Health Tips | Tamil Health Tips https://youtu.be/_VtTN7djzCA


10. ஸ்கிப்பிங் செய்தால் இவ்வளவு நன்மைகளா|Skipping is very Good for health|Organic Living|Health Tips https://youtu.be/OwDRCI8G2qc


11. நான் ஸ்டிக் பாத்திரங்கள் ஆபத்து | Why Non stick Vessels are bad for health | Organic Living https://youtu.be/NvKgG_ghWPU


12. கொலுசு அணிவதன் ரகசியம் | Organic Living | Health Tips | Tamil Health Tips https://youtu.be/RUoudT9X0Dc


13. தெரிந்திடாத அரிசி ரகங்களும் அதன் பயன்களும் | Unknown Varieties of Rice and Benefits | Organic Living https://youtu.be/C9SRkJbo4J8


14. நாள் முழுவதும் சுறுசுறுப்பாய் இருக்க அருமையான வழிகள் | How to be Active whole day | Organic Living https://youtu.be/1GNe9RQNCUw

15. HIV Cancer போன்ற கொடிய நோய்களை தீர்க்குமா மண்ணுளி பாம்பு | Red Sand Boa Cure Disease? Organic Living https://youtu.be/dl7hSmUY99s


16. நாமும் ஆகலாம் சூப்பர் ஹீரோ அட்டமா சக்திகளால் | Our Great Inner Superior Power | Organic Living https://youtu.be/THT7Qs9YDCs


17. விநாயகர் சதுர்த்தியும் விஞ்ஞான இரகசியமும் இயற்கையும்|Truth Behind Vinayagar Sathurthi|Organic Living https://youtu.be/sFi92MIR4Lw

18. காது சொல்றத உடல் உள் உறுப்புகள் கேக்கும் | Ear Cure inner body parts | Organic Living https://youtu.be/OUjQJmYFXSU


19. நமக்குள் இருக்கும் அதிசய சக்திகள் | Extra Sensitive Power in tamil | Organic Living https://youtu.be/WdPrf2Mfn5A


20. இதோ தீர்வு எதிர்காலம் சந்திக்க போகும் கண் நோய் | Natural Remedy for Eye Problem | Organic Living https://youtu.be/mePdA-8ptms


21. இஞ்சி ஒத்தடம் கிட்னியின் நண்பன் | Causes, symptoms, treatment for Kidney Failure |Organic Living https://youtu.be/PqKL5q1nVeE


22. நோய்களை குணமாக்கும் ஐம்புலன்கள் | Five Senses Maintains Good health | Organic Living https://youtu.be/EfSEPLUEpDU


23. ஆரா உடலின் மொழியை விளக்கும் அற்புதம் | Secret and Basic of Aura in tamil | Organic Living https://youtu.be/n0CcMwI024c


24. முட்டையில் வெள்ளை கருவா மஞ்சள் கருவா எது ஆரோக்கியம் | Egg Yellow vs Egg White | Organic Living https://youtu.be/Hc4GngZD1a0


25. நம்மை இயக்கும் பினியல் சுரபி | Secret of Pineal Gland | Organic Living https://youtu.be/5kSU5nFnqjY


26. அருகம்புல் அற்புத மருத்துவம் | Health Benefits of Bermuda Grass | Organic Living https://youtu.be/gk4oQhaHA8A


27. ஆரோக்கியமாய் வாழ்வதை பற்றி யோசிப்போம் | Aware to live Healthy Life | Organic Living https://youtu.be/R4S1h3yNDBg



28. எனிமா பயன்படுத்தி மலச்சிக்கலை சரிசெய்யலாம் | Enema Cane usage and its Benefits | Organic Living https://youtu.be/QXkQDspARKQ


29. உடல் உறுப்புகளின் கோளாறுகளை காட்டும் முகம் | What Face acne says about your health | Organic Living https://youtu.be/42Ek1zN3wfQ


30. உட்காரும் முறையில் தடுப்பு வைத்தியம் | Prevention Healing in Sitting Position | Organic Living https://youtu.be/UtLY4sKaUfg


31. Shocking இதெல்லாம் செஞ்சா கண்டிப்பா நோய் வரும் | Causes of Disease | Organic Living https://youtu.be/U6YdE-2NJgU


32. மரம் வளர்ப்பதால் என்ன நன்மைகள் | Why Trees are so Important | Benefits of Tree | Organic Living https://youtu.be/DDk_aH1lXZ0


33. Chow Chow Health Benefits | Chayote Health Benefits | சௌ சௌ மருத்துவ பயன்கள் | Organic Living https://youtu.be/8UjW-rqiwZQ


34. சினிமாவால் ஆரோக்கியம் இழந்த மனிதர்கள் | Cinema is Good or bad for health | Organic Living https://youtu.be/wYrVKl3mHYE


35. ஞானத்தை பெறுவது எப்படி | How to get Knowledge | Paguth Chandruji | Organic Living https://youtu.be/UlrjVSFdM2g


36. What is Technical God | தொழில் நுட்ப கடவுள் என்றால் என்ன| Paguth Chandruji | Organic Living https://youtu.be/Wd2kdww2PAw


37. வேலையாள் ஆரோக்கியத்தை பறிகொடுத்து நிற்கும் மனிதர்கள் | Smart Work Vs Hard Work | Organic Living https://youtu.be/PwojvzcWpIE


38. Save 300 Trees in Namakkal Puthupatti | Thangavel sir about his School Trees needs | Organic Living https://youtu.be/_CCCHKpJPY4


39. செய்தி தாளில் ஆபத்து | Dont Eat newspaper Wrapped food | Organic Living https://youtu.be/dexJh9ndFM0


40. பெண்களுக்கு இப்படியும் ஒரு ஆபத்தா | பெண்களின் மானத்திற்கு ஓரு சவால்|Women Freedom | Organic Living https://youtu.be/l_JgPqfIPms


41. BPகும் Cholesterol கும் நிரந்தர தீர்வு | Home Remedy for High BP and Cholesterol | Organic Living https://youtu.be/hmbaZ-v3ka8


42. யோகா என்றால் என்ன | யோகாவை பற்றிய தகவல் | Yoga Means What | Organic Living https://youtu.be/FnrrZxQh56U


43. 48 நாள் ஒரு மண்டலம் ஏன் சக்தி வாய்ந்தது | why 48 days is powerful | Organic Living https://youtu.be/sMYFTc90wNU


44. பப்பாளி மருத்துவ குணங்கள் | Papaya Health benefits | பார்த்து பகிருங்கள் | Organic Living https://youtu.be/z0H2sfFGO18


45. விரதம் இருந்தால் ஆரோக்கியம் இருக்கும் | Fasting Health Benefits | Organic Living https://youtu.be/dLwVNVeHdtw


46. உடல் கழிவை சரி செய்யும் வெங்காய பாதம் | Remove Toxins in body | Organic Living https://youtu.be/-uBBxFVG72o

47. Jaggery | Naattu Sakarai Benefits | அற்புதமான நாட்டு சர்க்கரை | Organic Living https://youtu.be/QSts1Y70qPc


48. Nammalvar Speech about Organic Farming | Organic Living https://youtu.be/6nNgAUfGIxU

49. Super Brain Yoga | Thoppukaranam | Scientific Benefits of Child Punishment | Organic Living
https://youtu.be/qrSzhHg6snY


50. கோடீஸ்வரர் ஆக 7 வழிகள் | 7 ways to become Millionaire | Warren Buffet | Organic Living https://youtu.be/erZF1H35kw0


51. Grow Tree and plant Save Water | Organic Living https://youtu.be/wCSLKuEI0-Q


52. Lemon | எழுமிச்சை | Organic Living https://youtu.be/ePgaGvxetE8


53. Vitamin C in Detail | Water Soluble Vitamin | Organic Living https://youtu.be/yUpKlVkui3M


54. ஆரோக்கியத்திற்கு மட்டுமே | Why Should We Watch Organic Living Youtube Channel | Organic Living https://youtu.be/clGkgog7h-w


55. Valaipoo Vadai | வாழைபூ வடை | Vadai Special | Cooking Tips |Organic Living https://youtu.be/hiZ5CVUtNTY


56. Spirulina Health Benefits | சுருள் பாசியின் அற்புத நன்மைகள் | Organic Living https://youtu.be/YsrNDCmjgM4


57. Dont Eat these food in Empty Stomach | வெறும் வயிற்றில் இதை சாப்பிடாதீர்கள் | Organic Living https://youtu.be/05wznsQfvdc


58. 7 Chakras Health Benefits | 7 சக்கரங்கள் | Organic Living https://youtu.be/Rcxuk8hoWkc


59. How to Start Maadi Thottam | Terrace Gardening is good for Health | Organic Living https://youtu.be/5eBYh_IxNI8


60. Healthy Foods to Eat that Particularly for Children | Organic Living https://youtu.be/-Dz1xzU_PTs


61. Hernia | What is Hernia | Why Hernia Formed | Remedies for Hernia | குடல் இறக்கம் | Organic Living https://youtu.be/a44YLtdaE18


62. Urine color Says your health | Organic Living https://youtu.be/zw8O_ffaFgA


63. Trees Around our House | நம் வீட்டை சுற்றி இருக்க வேண்டிய மரங்கள் | Organic Living https://youtu.be/Ee-WDWs3FAo


64. Morning Meditation Mandras | தினமும் காலையில் சொல்ல வேண்டிய மந்திரம் | Organic Living https://youtu.be/yAwaivVOzB0


65. Palm Healing | Organic Living https://youtu.be/LLmlIu2j6WI


66. Fat Soluble Vitamins | Vitamins are two type Organic Living https://youtu.be/XhmoCgoxDtU


67. Two Types of Vitamins | Organic Living https://youtu.be/D0ZhNRRHoMc


68. Who is Bahubali in Real | An interesting Real Life Hero | உண்மை பாகுபலி யார் | Organic Living https://youtu.be/orUnGgAaBF8


69. Tamilan endru Sol | தமிழன் என்றொரு இனமுண்டு | Organic Living https://youtu.be/vvKiIbC5HVE


70. Viral Kanitham | Finger Mathematics | விரல் கணிதம் |Organic Living https://youtu.be/32RMmo2vs1I


71. How to Save water | Water is Essential for Living | Organic Living https://youtu.be/V0yqtMbZwrs


72. Gas Stove Cleaning and Maintenance | Smart Kitchen | Kitchen Tips In Tamil | Organic Living https://youtu.be/Exr3sgw4_xg


73. Uterine Tumors | கர்ப்பப்பை நீர்கட்டிகள் | Organic Living https://youtu.be/f64LQrYEYdY


74. How to dress in Summer | கோடைகாலத்தில் ஆடைகளை எப்படி உபயோகிக்கலாம் | Organic Livinghttps://youtu.be/T3YLzu4giyc


75. Why Playing is Essential for children | குழந்தைகளுக்கு விளையாட்டு ஏன் மிக அவசியம் | Organic Living https://youtu.be/4avIdD6AHDk


76. Banana Benefits | Valaippalam | வாழைப்பழம்| Organic Living https://youtu.be/pPQuI5VhtqA


77. Jackfruit Content | பலாப்பழத்தில் உள்ள சத்துக்கள் | Organic Living https://youtu.be/PQ6ls5VU7bc


78. Mango and its Uses | மாம்பழம் | Organic Living https://youtu.be/IQJQLhg34UU


79. இலவச கல்வி தனியார் பள்ளிகளில்| Free Education in private Schools| Organic Living https://youtu.be/lGohPrrWU7A


80. Coconut Face Cream | How to remove Sun Tan from your face quickly | Beauty Tips | Organic Living https://youtu.be/2026dAxGwHg


81. Walking Makes good health | நடைப்பயிற்சி உடலும் மனமுன் சார்ந்தது | Organic Living https://youtu.be/w2yNqaqEATI


82. Spinal Cord Maintanance | முதுகு தண்டு பாதுக்கதல் | Organic Living
https://youtu.be/ISb2UPkDxjE

83. Indian acalypha | குப்பைமேனி மருத்துவ குணங்கள் | Acalypha indica | kuppai meni | Organic Living https://youtu.be/j6zGJnm2g3Y


84. What is Seed Balls | How to make Seed balls|விதை பந்துகள் என்றால் என்ன|எப்படி செய்வது|Organic Living https://youtu.be/HfqRlVjangU


85. Paasiparuppu nei urundai | பாசிப்பருப்பு நெய் உருண்டை | Organic Living https://youtu.be/cVWKP8D38Xg


86. How to breath for Long life | நீடிய வாழ்விற்கு மூச்சு | Organic Living
https://youtu.be/RcvzUSvcw88


87. Green Tea Benefits | Both English and Tamil | Organic Living https://youtu.be/bHlD4mPtUwE

88. Vitamins and Minerals in Our body | Organic Living https://youtu.be/NfSYP8pxbCM

89. Whatsapp Typography message | Organic Living https://youtu.be/H2QI6wK3Pz0

90. Banana Peel Benefits | வாழைபழ தோல் பயன்கள் | Organic Living
https://youtu.be/f-lXQ876598

91. How to Reduce Weight using ACV | Organic Living https://youtu.be/4Wdo8Szb8x8

92. Mother Milk Bank | தாய்பால் வங்கி | Organic Living
https://youtu.be/YEkXOPxrPmU

93. இந்தியாவின் முதல் அறுவை சிகிச்சை மருத்துவர் | India's First Plastic Surgeon Doctor | Organic Living https://youtu.be/v4av1CFLCOU

94. Book Review | Book Makes us Great | வித்தகன் ஆக்கும் புத்தகம் | Organic Living
https://youtu.be/gojivtcPf0M

95. THERUKOOTHU | STREET DRAMA | FIRST PRIZE in Kala utsav 2016 | Organic Living
https://youtu.be/lITE6KmN9xM

96. கோடை விடுமுறையை இப்படியும் கழிக்கலாம் | How to Educate your Children in this Summer | Organic Living https://youtu.be/q6uirhk69rw

97. Plastics are very Harmful to Human Being and Nature | Dont spoil Nature | Organic Living
https://youtu.be/x3k3TWa7t9U


98. தமிழ் புத்தாண்டை ஏன் ஆங்கில புத்தாண்டுக்கு நிகராய் கொண்டாடுவதில்லை| Tamil New Year Organic Living https://youtu.be/icfhFwWK4qc


99. பணத்தை ஈர்க்கும் யுக்தி | Money Attracting Technique | How to Attract money | Organic Living https://youtu.be/4OIDtK12UBM


100. Bitcoin is the future for Earning Money | How to Earn Money by Bitcoin | Organic Living
https://youtu.be/eldRcSJkD0o


101. நாம் சாப்பிடும் ஏ1 பால் மிக கொடியது | ஏ1 பால் vs ஏ2 பால் | A1 Milk Vs A2 Milk | Organic Living https://youtu.be/oUCuZW8z1Gw


102. தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்| How Drinking water Heals our human body | Organic Living https://youtu.be/3yWqcMJxD6s

103. 15 மூலிகை செடிகள் உங்கள் வீட்டில் இருக்க வேண்டும் | 15 Herbs should be in your house |Organic Living https://youtu.be/Q5xQ-0t4Gd0

104. How to Live life Happier | Tips to Live happy and healthy life | Organic Living https://youtu.be/RhQxL87-lSk

105. How to Grow Thick Eyebrow Naturally | Organic Living https://youtu.be/MmU_1FQvnVE

106. How to Reduce Global Warming | Organic Living https://youtu.be/SIVBEfYqu4E

107. How to make Chemical Free Home | கெமிக்கல் இல்லா வீடு | Organic Living https://youtu.be/lPhbMMl3v6A

108. இரத்த தானம் சிறந்த தானம் | Donate Blood Save Life | Organic Living https://youtu.be/zcyY8F3X54o

109. நடிகர் கிஷோர் ஒரு விவசாயி | Actor Kishore is a Farmer | Organic Living https://youtu.be/EMNYnDrFwf8

110. தொட்டாசுறுங்கில இவ்வளவு மருத்துவம் இருக்கா | Touch me Not Health Benefits | Organic Living https://youtu.be/DfEwit9faTs

111. நடிகை தேவயானியின் தற்போதைய நிலை | Actress Devaiyani's Current Occupation | Organic Living https://youtu.be/5qcezGdDfBs

112. தயாரிப்பாளர் சங்க தேர்தலும் விவசாயமும் விஷாலும்|Organic Living
https://youtu.be/GQa84DYBVXM

113. சந்தனம் செம சூப்பர் | Sandalwood is very Healthy | Organic Living https://youtu.be/xEw4hpK5Fy0

114. வாசனை திரவியம் கேடு தரும் | Usage of Scent is dangerous | Organic Living https://youtu.be/Y2SZc0f2yZ0


115. கோடைக்கு இதமான பருத்தி ஆடையின் சிறப்பு | Benefits of Cotton Dress | Organic Living https://youtu.be/PGeJ07ZtbLc


116. வீட்டிலேயே ஆரோக்கியமான பற்பொடி இருக்குங்க | Healthy Tooth Paste in Home | Organic Living https://youtu.be/Ek63GA_3GWo


117. மூன்று வேலை சாப்பிடுவது அவசியமா | Is Three times Eating Neccessary|Organic Living https://youtu.be/kWM-7iTmbT8


118. நோய் வர இது தான் காரணம் | This Cause Disease | Organic Living https://youtu.be/DivMLnYJeUg


119. கருவறை முதல் வகுப்பறை | Mother's womb is the first School | Organic Living https://youtu.be/bEjpbuXe62o


120. இசை தெரபி | Music Therapy | Organic Living https://youtu.be/LVmcwjPsGic


121. ஆயில் புல்லிங் | Oil Pulling | Health Benefits of Oil Pulling | Organic Living https://youtu.be/KcPF8ucCg1s


122. நான் யார் | Who am I | Organic Living https://youtu.be/E4oFAvNgsyc


123. School of Enlightened | Paguth Chandruji | Organic Living https://youtu.be/NgTdBjQtZYU


124. ஐய்யய்யோ புகைபழக்கம் இவ்வளவு கொடியதா| புகை உயிரின் பகை | Pugai Uyirin Pagai | Smoking Kills | Organic Living https://youtu.be/944vsrDN0Ak


125. Simple way to see ration card details in online | ரேஷன் கார்ட் ஆன்லைனில் | Organic Living https://youtu.be/iZvdNMCJJbg


126. கோபம் என்னும் கொள்ளையன் | Anger is our enemy | Organic Living https://youtu.be/qy8hZUawoYc


127. சீரகம் உடல் எடையை சீராக்கும் | Weight Loss by cumin | Organic Living https://youtu.be/JT8nIjLSsZ4


128. முடிக்கொட்டுதளுக்கு நிரந்தர தீர்வு வீட்டுலயே இருக்கு | Home remedy for Hair Lose| Organic Living https://youtu.be/IoSOToECJJA


129. சளி சமந்தப்பட்டவை தீர | Home Remedy for Cold Cough| Organic Living https://youtu.be/B95S6iZdKUM


130. விக்கலுக்கும் கொட்டாவிக்கும் உடனடி ஆறுதல் | Instant remedy for Hiccups and Yawning | Organic Living https://youtu.be/cW4fkxGgrTU


131. வாயால் வரும் நோய் | Eating habit will decide the disease | Organic Living https://youtu.be/p3KOfV5eGpg


132. இடது கை அறிவியல் | பீச்சாங்கை அறிவியல் | Left handers are intelligence | Organic Living https://youtu.be/NprjfDKjGuE

133. துர்நாற்றம் நீங்கனுமா | Do you want to get rid of Bad Smell | Organic Living https://youtu.be/Wdj4YYjlYwg


134. 40 வகை கீரைகளும் அதன் பயன்களும் | 40 Kinds of Greens and its benefits | Organic Living https://youtu.be/YUvKkaApM3Y


135. வாசலால் வீடு செழிக்கும் | Threshold keeps House Energetic | Organic Living https://youtu.be/ICQsZrwepiM


136. கோடை காய்ச்சலை தடுக்கும் மூன்று வழிகள் | How to Prevent summer fever in three steps | Organic Living https://youtu.be/CWi2OhkvcRQ


137. உறவுகளின் தற்போதைய நிலை | உறவுகளை இழந்த மனிதன் | No Relatives No Life | Organic Living https://youtu.be/NK-1Rv0NHbc


138. சந்தோஷமா வாழ இத கடைபிடிங்க | Follow this to live life happily | Organic Living https://youtu.be/mYuKWRq61qI


139. அடுத்தது என்ன நடக்கும் | What Next | Organic Living
https://youtu.be/ZWOOEdicX-8


140. தொல்லையாக மாறும் தொலைக்காட்சி | Stop Watching Television Make life Healthy | Organic Living https://youtu.be/bGYPeF9muRo


141. தியானத்தின் அடிப்படை | How to meditate for beginners | organic Living
https://youtu.be/aoXXL1Kev_E


142. எது சிறந்த தருணங்கள் | which is the best moments | Organic Living https://youtu.be/GI2BK6uBzGk


143. மிதிவண்டியின் தற்போதைய நிலை | மிதிவண்டி ஒண்ணு வாங்கணும் | Benefits of Bicycle | Organic Living https://youtu.be/TMK9I9nbrgU

144. உங்களால் முடியும் தியானத்தின் சிறப்பை உணர | Importance of Meditation | Organic Living https://youtu.be/ZDEC_Ew1T24


145. இப்படியும் பிரச்சனையை தீர்க்கலாம் வாங்க | New Method to solve Problem | Organic Living https://youtu.be/8zHctdcUc90


146. மதுவின் தற்போதைய நிலை | மதுபானத்திற்கு ஆப்பு வைத்த Supreme Court | Organic Living https://youtu.be/Hgp7EKICpDE


147. வெற்றியின் ரகசியம் | Success Formula | Its time to change | Organic Living https://youtu.be/6UxHlN6diUw


148. எதற்கு எப்படி இலவச சந்தாதாரர் ஆகவேண்டும்| How and Why to Subscribe Youtube Channel | Organic Living https://youtu.be/gmd4LKPOQ8k


149. பதில் தேவை | மூளைக்கு வேலை | Relaxation time | Solve the Puzzle | Organic Living https://youtu.be/blGYFe6K3ew


150. தியானம் தீய எண்ணங்களை அழிக்கும் | How Meditation delete negative thoughts| Organic Living https://youtu.be/TwQZSApIXUs


151. தியானம் விழித்துக்கொண்டே செய்வது எப்படி | How to Meditate by Opened Eye | Self Commanding | Organic Living https://youtu.be/9JMeSJDEN_0


152. கைபேசியின் தற்போதைய நிலை | கவலைக்கிடமான மனிதன் | Effects of Mobile radiation | Organic Living https://youtu.be/kcwpJigO0HU


153. மறதி ஒரு மருந்து | Forgetfulness is a medicine | Organic Living
https://youtu.be/HrLqF8PSAFA


154. அற்புதமான ஒருவன் உங்களுக்குள் | Wonderful Inner Journey | Find yourself | Organic Living https://youtu.be/VGpu-M2T_zs


155. மன பிரச்னையை எப்படி குறைப்பது | How to Dilute your Problem | Organic Living https://youtu.be/LK4UBCw-Lc8


156. தினமும் மழை மூன்று முறை பெய்ய இத பாருங்க | How to bring rain three times a day | Organic Living https://youtu.be/t5vr7-4M9vI


157. Namakkal Grand Book Festival | First time Live video from Organic Living https://youtu.be/LOH4yghG-MQ


158. அற்புதம் தரும் திருநீர் | Wonderful Thiruneer | Organic Living
https://youtu.be/aJkKIR-IdFc


159. #Savefarmers #SaveWater #SaveThamirabarani தாமிரபரணி தற்போதைய நிலை | Save Thamirabharani | Organic Living https://youtu.be/QvCxxEHn518160. ஆபரணங்களின் ஆச்சரியம் | Woman ornaments has more power | Organic Living
https://youtu.be/7i7I1jkY87U


161. பரோட்டா தற்போதைய நிலை நமக்கு வேட்டா | Harmful effects of Parrota | Organic Living https://youtu.be/GUkDzhvwQmQ


162.நாமக்கலில் மாபெரும் புத்தக திருவிழா | A Grand Book Festival in Namakkal | புத்தகம் | Organic Living https://youtu.be/9nVmDgg9Tvg


163.நோய் போக பாயில் படுங்க | Sleeping Mat is very essential for human | Organic Living
https://youtu.be/FUPPRq7JG6c


164.வெற்றிலை போட்டா நல்லதாம்ல | Vethalai Betel is really an amazing leaf | Organic Living
https://youtu.be/xQHW1IG68M8


165.பெண்னை பெண்னாக காட்டும் மஞ்சள் | Beauty and Health Benefits of Turmeric | Organic Living https://youtu.be/etrWbvkq7CI

166.வெந்தயம் நல்ல வைத்தியம் | Health Benefits of Fenugreek | Organic Living
https://youtu.be/QgvYtLjjKr4


167.இளநீரே கதாநாயகன் குளிர்பானம் வில்லன் | Benefits of Coconot | Effects of Cool drinks |Organic Living https://youtu.be/A5RplXrN2u4


168.உடல் எடையை குறைக்கும் செம்பு | Multiple Uses of Copper Vessels | Organic Living https://youtu.be/zdVAkcj2NPY


169.கண் தானம் மூலம் கடவுள் ஆகலாம் | Value of Eye Donation | Donate Eyes | Organic Living https://youtu.be/V3xzZxOba9I


170.ஒரு துளசி செடி பார்சல் | Wow thulasi benefits are amazing | Organic Living
https://youtu.be/ouvgPN1mOYU


171.டெங்குக்கு சங்கு எப்படி ஊதலாம் | Symptoms Effects Prevention for Dengue | Organic Living
https://youtu.be/MLVPQmNTjAg


172.ஆபத்தை கையில் வைத்திருக்கிறோம் | Effects of Cellphone | Organic Living
https://youtu.be/TjcJGTIPIO8


173.கல்லாதது உடல் அளவு | interesting Facts about Human | Organic Living
https://youtu.be/sl7v8iNdnH8


174.எழு தமிழா விழி தமிழா | Save Tamilnadu | Youngsters will solve |Organic Living https://youtu.be/RbjgR7R-cDY


175.பெண்மை ஏன் போற்றப்படும் சக்தி | Women are great Living Being | organic Living
https://youtu.be/xV3HzwBafsg


176.தூக்கத்தை தள்ளி போடாதிங்க | Sleeping is good for health | Organic Living
https://youtu.be/4C1fx2oPBGI


177.ஐஸ் தண்ணியா ஐயையோ வேண்டாம் பா | Ice water is Very Harmful | organic Living
https://youtu.be/-Wb1eS4tiHA


178.எந்தெந்த நேரத்துல எந்தெந்த உணவுகள் சாப்பிட்டா ஆரோக்கியம் | Time Makes food Healthy | Organic Living https://youtu.be/4l1wcB6GiiU


179.மனம் பணம் சார்ந்த பிரச்சனைகள் தீரணுமா | You can Solve both Health and Wealth Problem | Organic Living https://youtu.be/PCsH9T_s_Go


180.வியர்வை ஆரோகியதிற்கு எப்படி உதவுது | How Sweat Makes us Healthy | Organic Living
https://youtu.be/EA7_b9j5DxU


181.குளிர்சாதன பெட்டி ஒரு சவப்பெட்டியா | Harmful Effects of Refrigerator | Organic Living
https://youtu.be/veT93YW1DxY


182.History and Benefits of Tea | தேனீரின் வரலாறும் பயன்களும் | Organic Living
https://youtu.be/AUo5Bh0XY6g


183.புற்றுநோயை நாமே குணமாக்கலாம் | We Our self-Cure Cancer| Organic Living
https://youtu.be/lAE-BMaNh9M


184.மண்பானை தண்ணீர் நல்லதா | Is Manpaanai water useful | Organic Living
https://youtu.be/2elysl9Tbhw


185.Clapping hands gives more Benefits | கைகளை தட்டுங்க ஆரோக்கியமாக வாழுங்க | Organic Living https://youtu.be/z47SHz8cKqI


186.Alpha mind power Meditation| நாம் நினைப்பது நடக்கும் | ஆல்பா தியானம் | Organic Living https://youtu.be/a2AUe2uwY0w


187.Amazing Human Body | மனித உடலின் தெரியாத தகவல் | Organic Living
https://youtu.be/1zjvsVbXWNc


188.Organic Living Official Teaser | Youtube Channel Teaser | Niruban Chakravarthi https://youtu.be/64iNgCuA9m0


189.Hydrocarbon@Methane Gas Project| ஹைட்ரோ கார்பன் எரிவாயு திட்டம் | மீதேன் திட்டம் | Organic Living https://youtu.be/asLpUadJlGU


190.#Yawning is contagious why Tamil | கொட்டாவி வருவது எதனால் | Organic Living
https://youtu.be/7EDQVthJy-4

191.#belching a Sign of Digestion | ஏப்பம் செரிமானத்தின் அறிகுறியா| Organic Living
https://youtu.be/wZgCtvGlmEw


192.Cesarean Overtaken the Normal Delivery | இன்று சுக பிரசவத்தின் வேதனையான நிலை | Organic Living https://youtu.be/IMDbFBqlcrs


193.True Meaning of a Famous Song | புகழ்பெற்ற பாடலின் அர்த்தமுள்ள விளக்கம் | Organic Living | Niruban https://youtu.be/n6sBchK8CkM


194.Sitting on Floor and Eat | சமணங்கால் போட்டு சாப்பிடவும் | Organic Living
https://youtu.be/PDRgp4pwV_I


195.Scientific Reason behind Temple Worship | கோயில்களின் விஞ்ஞான ரகசியம் |Organic Living https://youtu.be/qYt0Qv7klxs


196.Seemakaruvela Maram history | Curse for Tamilnadu |சீமைகருவேலமரம் தமிழ்நாட்டின் சாபம்|Organic Living https://youtu.be/vB9gL_5eKsw


197.How Rain is formed Tamil | மழை வரும் மரம் நாடு| How planting tree helps Rain | Organic Living https://youtu.be/j7vhtNM8zos


198.Health Benefits of Amukkarai Kilangu and Kandan kaththiri | Tamil Mooligai | Usha | Organic Living https://youtu.be/qewFTTBBhVI


199.Cook and Eat | Organic Living | Usha | Niruban | Organic Living https://youtu.be/v1F_cg0NWQQ


200.Health benefits of Kasani Keerai | Chicory leaves| Organic Living https://youtu.be/ydkZtks-hnQ


201.Health benefits of Arugampul | Bermuda Grass | Organic Living https://youtu.be/novPf0F8JBA


202.Proverbs for Eating Habits | Niruban Chakravarthi | Organic Living
https://youtu.be/wJ5AUFRXlDA


203.Home Remedies used to cure Major diseases | Organic Living
https://youtu.be/Vq47uYsJLF8

204.Indian Country Cow in Tamil | Jallikkattu Information | Cattle Breed | Organic Living
https://youtu.be/g_QFJl0K12I

205.Maadi Thottam | மாடித்தொட்டம்| Terrace Garden | Niruban | Organic Living
https://youtu.be/zJaOZ-Wy-mM

சிரிப்பு யோகாவின் சிறப்பு நன்மைகள் | Laughing yoga Health Benefits|Organ...





Among the people sadness and stress is dumped , here is the practice of laughing Yoga which helps people to make their life better

சிரிப்பு யோகாவின் சிறப்பு நன்மைகள்



Official Website   : https://goo.gl/cYOmYx

Facebook Page   : https://goo.gl/8B9h4K

Twitter Page        : https://goo.gl/ghPqqK

Facebook Group : https://goo.gl/iarJFH

Youtube Channel : https://goo.gl/Gy4kna

For Amazon  : http://amzn.to/2lvdXox

For Flipkart  :  http://fkrt.it/RYa0o!NNNN

8 வடிவ நடைப்பயிற்சியின் அற்புத பயன்கள் | 8 walk Health Benefits | Organi...





8 வடிவ நடைப்பயிற்சியின் அற்புத பயன்கள் | 8 walk Health Benefits | Organic Living | Tamil Health Tips https://youtu.be/nqpYx4SgxCo

30 வகை அவசர சமையல்

செய்வது சுலபம்... சுவையோ அபாரம்!


மல்டி பருப்புப் பொடி


தேவையானவை:
துவரம்பருப்பு - ஒரு கப்,
உளுத்தம்பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு, கொள்ளு - தலா 4 டேபிள்ஸ்பூன்,
மிளகு - 10,
காய்ந்த மிளகாய் - 4,
பெருங்காயத்தூள்,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பெருங்காயத்தூள், உப்பு தவிர, கொடுத்துள்ள எல்லா பொருட்களையும் தனித்தனியாக வெறும் கடாயில் பொன்னிறத்தில் வறுத்துக் கொள்ளவும். எல்லாவற்றையும் ஒன்றாக்கி ஈரமில்லாத மிக்ஸியில் அரைத்து, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு, ஈரமற்ற, காற்றுப்புகாத சுத்தமான டப்பாவில் சேமித்து வைக்கவும்.

சூடான சாதத்தில், இந்தப் பொடியுடன் நெய் அல்லது எண்ணெய் விட்டுப் பிசைந்து சாப்பிடலாம். சாம்பார், குழம்பு வைக்க முடியாத அவசர காலங்களில் கை கொடுக்கும் இந்த மல்டி பருப்புப் பொடி.

தனியா-மிளகு-சீரகப்பொடி

தேவையானவை:
தனியா - 4 டேபிள்ஸ்பூன்,
மிளகு - 10,
சீரகம் - 4 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெறும் கடாயில் மிளகு, சீரகம், உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், தனியா ஆகியவற்றை ஒன்றாக வறுக்கவும். ஆறியதும், உப்பு சேர்த்து ஈரமில்லாத மிக்ஸியில் பொடிக்கவும். இதை, ஈரமற்ற, காற்றுப்புகாத சுத்தமான டப்பாவில் அடைத்து வைத்து, தேவைப்படும்போது பயன்படுத்தலாம்.

இந்தப் பொடியை, ஒரு மாதம் வரை வைத்து உபயோகப்படுத்தலாம். சூடான சாதத்தில் பொடி சேர்த்து, எண்ணெய், நெய் கலந்து சாப்பிடலாம்.

சீரக ரைஸ்

தேவையானவை: சாதம் - ஒரு கப், சீரகம் - 4 டீஸ்பூன், பூண்டு - 15 பல், சோம்பு, உளுத்தம்பருப்பு, மிளகுத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று, கடுகு - கால் டீஸ்பூன், நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பூண்டை தோல் உரித்து, பொடியாக நறுக்கவும். கடாயில் நெய் விட்டு... கடுகு தாளித்து, நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு, உளுத்தம்பருப்பு, சோம்பு, சீரகம், நறுக்கிய பூண்டு, மிளகுத்தூள் ஆகியவற்றை ஒவ்வொன்றாகச் சேர்த்து நன்றாக வதக்கவும். இதில் சாதம், உப்பு சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்

முதல் நாள் இரவே, கொடுத்துள்ள பொருட்களை வறுத்து தயார் செய்து கொண்டால், காலையில் சாதம் வடித்துக் கலந்தால், ஈஸியாக வேலை முடிந்து விடும்.

Click here


தக்காளி சாதம்

தேவையானவை:
அரிசி - 200 கிராம்,
வெங்காயம் - 2,
தக்காளி - கால் கிலோ,
இஞ்சி - ஒரு துண்டு,
தோலுரித்த பூண்டு - 10 பல்,
பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்),
கடுகு - கால் டீஸ்பூன்,
பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன்,
புதினா - சிறிதளவு,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: குக்கரில், ஒரு பங்கு அரிசிக்கு இரண்டரை பங்கு தண்ணீர் விட்டு வேக வைத்து, 3 விசில் வந்ததும் இறக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து... நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு நசுக்கிய இஞ்சி-பூண்டு, பச்சை மிளகாய், பொட்டுக்கடலை போட்டு வதக்கவும். பிறகு, ஆய்ந்து நறுக்கிய புதினா சேர்த்து நன்கு வதக்கவும். மணம் வந்ததும், பொடியாக நறுக்கிய தக்காளி, உப்பு சேர்த்து நன்கு வதக்கி, எல்லாம் ஒன்றாகக் கலந்து வந்ததும் இறக்கி, அதில் வடித்த சாதம் போட்டு கலந்தால் தக்காளி சாதம் ரெடி.

லெமன் ரைஸ்

தேவையானவை:
அரிசி - 200 கிராம்,
எலுமிச்சம்பழம் - 2,
கடுகு - கால் டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - ஒன்று,
பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
பெருங்காயத்தூள் - சிறிதளவு,
வறுத்து, தோல் நீக்கிய வேர்க்கடலை - 4 டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: எலுமிச்சம் பழத்தை நறுக்கி சாறு பிழிந்து கொள்ளவும். குக்கரில் ஒரு பங்கு அரிசிக்கு, இரு பங்கு தண்ணீர் விட்டு... 3 விசில் வந்ததும் இறக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து... நறுக்கிய பச்சை மிளகாய், பொட்டுக்கடலை, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், வேர்க்கடலை சேர்த்து நன்கு வறுத்து இறக்கவும். வறுத்த கலவையில் சாதம் சேர்த்துக் கலந்து, எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து சீராகக் கலந்து பரிமாறவும்.


கறிவேப்பிலைப் பொடி


தேவையானவை:
கறிவேப் பிலை (ஆய்ந்தது) - ஒரு கப்,
மிளகு - 10,
சீரகம் - ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2,
 உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெறும் கடாயில் மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு சேர்த்து, நன்கு வறுத்து தனியே எடுத்துக் கொள்ளவும். அதே கடாயில், கறிவேப்பிலையைப் போட்டு நன்கு வறுக்கவும். அது ஆறியதும், 'மொறுமொறு'வென ஆகிவிடும். பிறகு, எல்லாவற்றையும் ஒன்றாக்கி, உப்பு சேர்த்து ஈரமில்லாத மிக்ஸியில் பொடிக்க... சுவையான கறிவேப்பிலைப் பொடி ரெடி!

சூடான சாதத்தில், இந்தப் பொடியுடன் நெய் அல்லது எண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம்.


கத்திரிக்காய் ரைஸ்


தேவையானவை:
அரிசி - கால் கிலோ,
பிஞ்சுக் கத்திரிக்காய் - 6,
வெங்காயம் - ஒன்று,
கடுகு - கால் டீஸ்பூன்,
கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - ஒன்று,
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
இஞ்சி-பூண்டு விழுது - அரை டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: குக்கரில், ஒரு பங்கு அரிசிக்கு இரு பங்கு தண்ணீர் விட்டு, 3 விசில் வந்ததும் இறக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து... நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு, நறுக்கிய கத்திரிக்காய் சேர்த்து, வதக்கியதும் இஞ்சி -பூண்டு விழுது, கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள், உப்பு போட்டுக் கலந்து வதக்கவும். கத்திரிக்காய் வெந்து மணம் வந்ததும் இறக்கவும். இந்தக் கலவையில் சூடான சாதத்தைச் சேர்த்து, நெய் அல்லது நல்லெண்ணெய் கலந்து பரிமாறலாம்.

ஈஸி காரக் குழம்பு

தேவையானவை:
புளி - 50 கிராம்,
வெங்காயம் - ஒன்று,
பூண்டு - 10 பல்,
காய்ந்த மிளகாய் - 2,
வெந்தயம் - கால் டீஸ்பூன்,
கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
கடுகு - கால் டீஸ்பூன்,
குழம்பு மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: புளியை அரை கப் தண்ணீரில் ஊற வைத்து, நன்கு கரைத்து வடிகட்டவும். கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, கிள்ளிய காய்ந்த மிளகாய், வெந்தயம், கடலைப்பருப்பு தாளிக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும். பிறகு, வடிகட்டிய புளித் தண்ணீர் விட்டு, குழம்பு மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வரும் சமயத்தில், கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும். இதற்குத் தொட்டுக்கொள்ள சுட்ட அப்பளம் சிறந்த காம்பினேஷன்!


கிரீன் வெஜிடபிள் ரைஸ்

தேவையானவை:
பாசுமதி அரிசி - அரை கிலோ,
கேரட் துருவல், பச்சைப் பட்டாணி (தோல் உரித்தது) - தலா ஒரு கப், வெங்காயம், குடமிளகாய் - தலா ஒன்று,
பீன்ஸ் - 10,
பச்சை மிளகாய் - 3,
புதினா, கொத்தமல்லி - சிறிதளவு, நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: குக்கரில் ஒரு பங்கு பாசுமதி அரிசிக்கு, இரு பங்கு தண்ணீர் விட்டு இரண்டு விசில் வந்ததும் இறக்கவும்.

குடமிளகாயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பீன்ஸை பொடியாக நறுக்கவும். கடாயில், நெய் விட்டு நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு, கேரட் துருவல், நறுக்கிய குடமிளகாய், நறுக்கிய பீன்ஸ், பட்டாணி, உப்பு சேர்த்து மிதமான தீயில் வதக்கவும். காய்கள் சரியான பதத்தில் வெந்ததும், புதினா சேர்த்து கலந்து இறக்கவும். அதில், சாதம் போட்டுக் கலந்து, கொத்தமல்லி தூவி பரிமாறவும். இதற்கு, தயிர் பச்சடி சூப்பர் சைட் டிஷ்.

புதினா ரைஸ்

தேவையானவை:
சாதம் - ஒரு கப்,
ஆய்ந்து, அலசிய புதினா - ஒரு கப்,
வெங்காயம் - ஒன்று,
பச்சை மிளகாய் - 2,
சீரகம் - 2 டீஸ்பூன்,
கடுகு - கால் டீஸ்பூன்,
ஸ்வீட் கார்ன், நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் நெய் விட்டு கடுகு, சீரகம் தாளித்து... நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு, புதினா சேர்த்து மணம் வரும் வரை வதக்கி, உப்பு சேர்த்துக் கலந்து, மீண்டும் வதக்கவும். இந்தக் கலவையில் உதிர்த்த ஸ்வீட் கார்ன், சாதம் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.

பட்டர்-புதினா-வெஜிடபிள் சாண்ட்விச்

தேவையானவை:
பிரெட் - ஒரு பாக்கெட்,
வெண்ணெய் - 100 கிராம்,
ஆய்ந்து, அலசிய புதினா - ஒரு கப்,
கேரட் துருவல் - ஒரு கப்,
பச்சை மிளகாய் - ஒன்று,
நறுக்கிய தக்காளி, நறுக்கிய வெங்காயம் - தலா ஒரு கப்,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஆய்ந்த புதினா, பச்சை மிளகாய், உப்பு மூன்றையும் மிக்ஸியில் போட்டு நைஸாக அரைக்கவும். ஒரு பிரெட் ஸ்லைஸ் மீது, புதினா பேஸ்ட் மற்றும் வெண்ணெயைத் தடவவும். பிறகு, நறுக்கிய வெங்காயம், தக்காளி, கேரட் துருவலை அதன் மீது பரவலாகத் தூவி, இன்னொரு பிரெட் ஸ்லைஸ் வைத்து மூடவும். இதேபோல், தேவைப்படும் அளவுக்கு தயார் செய்யவும். தயார் செய்த பிரெட்களை டோஸ்டரில், டோஸ்ட் செய்து பரிமாறவும். அல்லது தவாவில் டோஸ்ட் செய்தும் பரிமாறலாம்.


நியூட்ரிஷியஸ் வெஜ் சாலட்


தேவையானவை:
நறுக்கிய வெள்ளரி, தக்காளி, வெங்காயம் - தலா ஒரு கப், பொடியாக நறுக்கிய கேரட், குடமிளகாய் - தலா ஒரு கப், முளைகட்டிய பாசிப்பயறு - ஒரு கப்,
எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்,
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்,
நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கொடுத்துள்ள எல்லா காய்கறிகளையும் அகலமான பாத்திரத்தில் போட்டு, முளைகட்டிய பாசிப்பயறு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பிறகு, மிளகுத்தூள், கொத்தமல்லி, உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்து மீண்டும் ஒருமுறை நன்கு கலந்து பரிமாறவும்.

முதல் நாள் 'பார்ட்டி', 'ட்ரீட்' என அதிகம் கொழுப்பு சத்து நிறைந்த உணவு சாப்பிட்டவர்கள், அடுத்த நாள் அதை பேலன்ஸ் செய்வதற்கு, இந்த சத்து நிறைந்த எளிய உணவை சாப்பிடுவது வயிற்றுக்கு நல்லது.

வெஜிடபிள் ரவா உப்புமா

தேவையானவை:
ரவை - கால் கிலோ,
பட்டாணி - 100 கிராம்,
வெங்காயம், கேரட், குடமிளகாய், பச்சை மிளகாய் - தலா ஒன்று, பீன்ஸ் - 4,
கடுகு - கால் டீஸ்பூன்,
பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன்,
இஞ்சி - சிறிய துண்டு,
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு,
எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்,
நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் நெய் விட்டு கடுகு தாளித்து, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும். பிறகு, பொட்டுக்கடலை சேர்த்துக் கலந்து, நறுக்கிய காய்கறிகள், பட்டாணி, உப்பு சேர்த்து வதக்கவும். எல்லாம் ஒன்றாகக் கலந்து மணம் வந்ததும், ஒரு பங்கு ரவைக்கு இரு பங்கு தண்ணீர் விடவும். அது, கொதிக்க ஆரம்பித்ததும் மிதமான தீயில் அடுப்பை வைத்து, ரவையை மெதுவாகத் தூவவும். எலுமிச்சைச் சாறு, நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு கிளறி இறக்கிப் பரிமாறவும்.

மிக்ஸட் தயிர் சாதம்

தேவையானவை:
அரிசி - 200 கிராம்,
புளிப்பில்லாத தயிர் - 2 கப்,
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒன்று,
கேரட் துருவல், பொடியாக நறுக்கிய மாங்காய், மாதுளை முத்துக்கள் - தலா கால் கப்,
திராட்சை - 20,
பொடியாக நறுக்கிய ஆப்பிள், வெள்ளரித் துண்டுகள் - தலா ஒரு கப், கொத்தமல்லி - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை: குக்கரில், ஒரு பங்கு அரிசிக்கு நான்கு பங்கு தண்ணீர் விட்டு, வேக விட்டு நான்கு விசில் வந்ததும் இறக்கவும்.

நறுக்கிய கொத்தமல்லி நீங்கலாக, மற்ற அனைத்து காய்கறிகள், பழங்களை ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கலக்கவும். அதில் புளிக்காத தயிர், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு, நன்கு மசித்த சாதம், கொத்தமல்லி சேர்த்துக் கலக்க... சுவையான மிக்ஸட் தயிர் சாதம் ரெடி!


பூண்டுப் பொடி


தேவையானவை:
பூண்டு - 100 கிராம்,
காய்ந்த மிளகாய் - 4,
உளுத்தம்பருப்பு - 4 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பூண்டை தோல் உரித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு பூண்டு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பை கருகாமல் மணம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும். ஆறிய தும் மிக்ஸியில் போட்டு, உப்பு சேர்த்துப் பொடிக் கவும். அதனை ஈரமில்லாத டப்பாவில் அடைத்து வைத்து, தேவைப் படும்போது பயன் படுத்திக் கொள்ளவும்.

உருளைக்கிழங்கு மசாலா பொரியல்

தேவையானவை:
உருளைக்கிழங்கு - அரை கிலோ,
வெங்காயம் - 2,
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
கடுகு - கால் டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து, உதிர்த்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து... நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறத்தில் வதக்கவும். பிறகு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கிளறியதும் உதிர்த்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.

இது, எல்லா வகையான 'வெரைட்டி ரைஸ்', சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ள சிறந்தது.

தக்காளி ரசம்

தேவையானவை:
தக்காளி - கால் கிலோ,
புளி - 50 கிராம்,
பச்சை மிளகாய் - 1,
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்,
மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா அரை டீஸ்பூன்,
கடுகு - கால் டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - சிறிதளவு,
நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: புளியைத் தண்ணீரில் ஊற வைத்து, கரைத்து வடிகட்டவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, வடிகட்டிய புளித் தண்ணீரை விட்டு, நறுக்கிய பச்சை மிளகாய் சேர்க்கவும். பிறகு, மிளகுத்தூள், சீரகத்தூள், சாம்பார் பொடி, உப்பு சேர்த்துக் கலந்ததும், பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்க்கவும். எல்லாம் ஒன்றாக கலந்து நுரைத்து, ஒருமுறை கொதித்ததும் பெருங்காயத்தூள், நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.


காப்ஸிகம் ரைஸ்

தேவையானவை:
சாதம் - ஒரு கப்,
குடமிளகாய், வெங்காயம், பச்சை மிளகாய் - தலா ஒன்று,
பூண்டு - 10 பல்,
இஞ்சி - சிறிய துண்டு,
கடுகு - கால் டீஸ்பூன்.
நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். தோலுரித்த பூண்டு, பொடியாக நறுக்கிய இஞ்சி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு, பொடியாக நறுக்கிய குடமிளகாய், உப்பு போட்டு நன்றாகக் கலக்கவும். எல்லாம் ஒன்றாகக் கலந்து வெந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும். இந்தக் கலவையில் சூடான சாதம் சேர்த்துக் கலக்க... காப்ஸிகம் ரைஸ் ரெடி!


பேபி கார்ன் பஜ்ஜி

தேவையானவை:
பேபி கார்ன் - 6, கடலை மாவு,
அரிசி மாவு - தலா அரை கப்,
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பேபி கார்னை நீளவாக்கில் நறுக்கி தனியே வைக்கவும். எண்ணெய் தவிர, மற்ற அனைத்து பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து, தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். காடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் நறுக்கிய பேபி கார்னை மாவில் தோய்த்து எண்ணெயில் பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.

இதேபோல் வாழைக்காய், கத்திரிக்காய், குடமிளகாய், உருளைக்கிழங்கு, வெங்காயம் போன்றவற்றிலும் பஜ்ஜி செய்யலாம்.

இதற்குத் தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி நல்ல காம்பினேஷன்!


வெஜிடபிள் நூடுல்ஸ்

தேவையானவை:
நூடுல்ஸ் - ஒரு பாக்கெட்,
கேரட் துருவல், பட்டாணி, நறுக்கிய குடமிளகாய், நறுக்கிய ஸ்வீட் கார்ன் கலவை - ஒரு கப்,
நறுக்கிய வெங்காயம் - 1,
நறுக்கிய கொத்தமல்லி - சிறி தளவு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண் ணெய் விட்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். கொடுத்துள்ள எல்லா காய்கறிகள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பச்சை வாசனை போன தும், தண்ணீர் விடவும். கொதிக்க ஆரம்பித்ததும் நூடுல்ஸ் சேர்த்துக் கிளறவும். வெந்ததும், கொத்தமல்லி தூவி இறக்கவும்.

புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ்

தேவையானவை:
சாதம் - ஒரு கப்,
வறுத்த வேர்க்கடலை, பொட்டுக்கடலை - தலா 50 கிராம், முந்திரிப்பருப்பு, பாதாம்பருப்பு - தலா 10,
உலர்ந்த திராட்சை - 20,
நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் நெய் விட்டு சாதம், உப்பு தவிர, கொடுத் துள்ள எல்லா பொருட் களையும் சேர்த்து பொன்னிறத்தில் வறுக்கவும். அதில் சாதம், உப்பு சேர்த்துக் கலந்து பரிமாறவும். விருப்பப்பட்டால் சிறிது மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளலாம்.

புரோட்டீன் ரிச்சாக உள்ள இந்த நட்ஸ் ரைஸ், உடனடி எனர்ஜி கொடுக்கும்.

சேமியா உப்புமா

தேவையானவை:
சேமியா - ஒரு பாக்கெட்,
கேரட் துருவல்,
நறுக்கிய குடமிளகாய் - அரை கப்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரை கப்,
பச்சை மிளகாய் - 2,
இஞ்சி - சிறு துண்டு,
பொட்டுக்கடலை - ஒரு டீஸ்பூன்,
கடுகு - கால் டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன்,
எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்,
கொத்தமல்லி - சிறிதளவு,
நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் நெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய இஞ்சி, பொட்டுக்கடலை சேர்த்து வதக்கவும். பிறகு குடமிளகாய், கேரட் துருவல் கலந்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு, உப்பு சேர்த்து, ஒரு பங்கு சேமியாவுக்கு இரு பங்கு தண்ணீர் விடவும். கொதித்ததும், அடுப்பை மிதமான தீயில் வைத்து, சேமியாவைப் போட்டுக் கிளறவும். வெந்ததும், எலுமிச்சைச் சாறு சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லி தூவிக் கிளறி இறக்கவும்.

சேமியாவுக்குப் பதிலாக கோதுமை ரவை, அரிசி ரவை சேர்த்தும் செய்யலாம். இதற்குத் தொட்டுக்கொள்ள சட்னி ஏற்றது.

தக்காளி சட்னி

தேவையானவை:
வெங்காயம், தக்காளி - தலா கால் கிலோ,
இஞ்சி - சிறு துண்டு,
காய்ந்த மிளகாய் - 4,
கடுகு - கால் டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு... தோலுரித்த வெங்காயம், கழுவிய தக்காளி போட்டு நன்கு வதக்கி தனியே எடுத்து வைக்கவும். அதே கடாயில் இஞ்சி, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்க வும். இவற்றையெல்லாம் ஒன்றாக்கி, உப்பு சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். கடுகு தாளித்து, கொட்டிக் கலந்து பரிமாறலாம்.

இந்த சட்னி இட்லி, தோசைக்குத் தொட்டுக்கொள்ள டேஸ்ட்டாக இருக்கும்.

பீட்ரூட் ரைஸ்

தேவையானவை:
சாதம் - ஒரு கப்,
பீட்ரூட், வெங்காயம், பச்சை மிளகாய் - தலா ஒன்று,
கடுகு - கால் டீஸ்பூன்,
நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பீட்ரூட்டை தோல் சீவிக் கழுவி, துருவிக் கொள்ளவும். கடாயில் நெய் விட்டு கடுகு, நறுக்கிய பச்சை மிளகாய் தாளித்து... நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். அது, பொன்னிறமாக வதங்கியதும் பீட்ரூட் துருவல், உப்பு சேர்த்து மீண்டும் வதக்கவும். வெந்ததும் இறக்கி, சாதம் சேர்த்துக் கலக்கவும்.


வெங்காய சட்னி


தேவையானவை:
வெங்காயம் - ஒன்று,
கடலைப்பருப்பு - 4 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 4,
கடுகு - கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். ஆற வைத்து, உப்பு சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து, கொட்டிக் கலந்து பரிமாறவும்.

இட்லி, தோசை, சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ள இது சிறந்த காம்பினேஷன்.

தயிர் பச்சடி

தேவையானவை:
தயிர் - ஒரு கப்,
பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய், தக்காளி, கேரட் துருவல் கலவை - ஒரு கப்,
பச்சை மிளகாய் - இஞ்சி பேஸ்ட் - ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கொடுத்துள்ள காய்கறிகள், பச்சை மிளகாய் - இஞ்சி பேஸ்ட், உப்பு ஆகியவற்றை பாத்திரத்தில் போட்டு நன்கு கலக்கவும். பிறகு, தயிர் சேர்த்து மீண்டும் ஒருமுறை கலக்கினால்... தயிர் பச்சடி ரெடி!

இது, வத்தல் குழம்பு சாதம், வெஜிடபிள் ரைஸூக்குத் தொட்டுக்கொள்ள நல்ல சைட் டிஷ்!


வெஜிடபிள் கூட்டு


தேவையானவை:
கேரட், வெள்ளரிக்காய், கத்திரிக்காய், சௌசௌ, பச்சை மிளகாய் - தலா ஒன்று,
பீன்ஸ் - 6,
துவரம்பருப்பு - ஒரு கப்,
தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன்,
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்.
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
சீரகம் - கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கொடுத்துள்ள காய்கறிகளை கழுவி நறுக்கிக் கொள்ளவும். குக்கரில் துவரம்பருப்பு, மஞ்சள்தூள், நறுக்கிய காய்கறிகள், உப்பு சேர்த்து இரண்டு விசில் வரும் வரை வேக வைக்கவும். மிக்ஸியில் தேங்காய் துருவல், சீரகம், பச்சை மிளகாய் போட்டு அரைக்கவும். வேக வைத்த காய்கறிக் கலவையுடன் அரைத்ததை சேர்த்து ஒருமுறை கொதிக்க விடவும். கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்ட... வெஜிடபிள் கூட்டு தயார்!


மாங்காய் ரைஸ்

தேவையானவை:
சாதம் - ஒரு கப்,
மாங்காய் (பெரியது) - 1,
பேபி கார்ன் - 2,
பட்டாணி (தோல் உரித்தது) - ஒரு கப்,
கடுகு - கால் டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - ஒன்று,
இஞ்சி - சிறு துண்டு,
புதினா - சிறிதளவு,
நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: மாங்காயைத் தோல் சீவி துருவிக் கொள்ளவும். பேபி கார்னைப் பொடியாக நறுக்கவும். கடாயில் நெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் தாளித்து, புதினா சேர்த்து வதக்கவும். பிறகு பட்டாணி, நறுக்கிய பேபி கார்ன், உப்பு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். இந்தக் கலவையுடன் சாதம் சேர்த்துக் கலந்து, பின்னர், மாங்காய் துருவல் போட்டு மீண்டும் ஒருமுறை நன்கு கலக்கினால், மாங்காய் ரைஸ் ரெடி!

பாசிப்பருப்பு தால்

தேவையானவை:
பாசிப்பருப்பு - 100 கிராம்,
தக்காளி, பச்சை மிளகாய் - தலா ஒன்று,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப்,
இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்,
கடுகு - கால் டீஸ்பூன்,
நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: குக்கரில் பாசிப்பருப்பு, தக்காளி சேர்த்து வேகவிட்டு, 2 விசில் வந்ததும் இறக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வேக வைத்த பருப்பு-தக்காளியை அதில் சேர்த்து, உப்பு போட்டு, கொதிக்க விடவும். இறக்குவதற்கு முன் நறுக்கிய கொத்தமல்லி தூவவும்.

இதனை, சப்பாத்தி, சாதம் இரண்டுக்கும் தொட்டுக் கொள்ளலாம்.

கோவைக்காய் ரைஸ்

தேவையானவை:
சாதம் - ஒரு கப், கோவைக்காய் - 100 கிராம்,
வெங்காயம் - ஒன்று,
பச்சை மிளகாய் - 2,
பூண்டு - 6 பல்,
கடுகு - கால் டீஸ்பூன்,
சீரகம் - ஒரு டீஸ்பூன்,
புதினா - சிறிதளவு,
நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கோவைக்காயை வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில், நெய் விட்டு கடுகு தாளித்து... சீரகம், பச்சை மிளகாய் சேர்க்கவும். புதினா, நசுக்கிய பூண்டு, நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து, வதங்கியதும் கோவைக்காய் சேர்க்கவும். சில நிமிடங்கள் வதக்கி, வெந்ததும் இறக்கவும். இந்தக் கலவையில் சாதம் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.