வெந்தயம் நல்ல வைத்தியம் | Health Benefits of Fenugreek | Organic Livingகடன் பிரச்சனையை விடகாலைக் கடன் பிரச்சனை ரொம்பவே மோசமான நிலைமையில் உள்ளது. இதனால், காலையில் அவஸ்திப்படுபவர்கள் அதிகம் பேர் இருக்கின்றார்கள். இதில் கொடுமை என்னவென்றால் இந்த பிரச்சனையால் சில பேருக்கு அலுவலகம் செல்லக் கூட நேரமாகி விடுகின்றது. அப்புறம் அலுவலம் சென்று, மேலதிகாரியிடம் தாமதத்திற்கான காரணமாக, போக்குவரத்து நெரிசல் என்று பொய் கூற வேண்டியதுள்ளது. மேலதிகாரியும் எந்த போக்குவரத்து நெரிசல் என்று தெரியாமல் விழிப்பார். பாவம்
        சரிங்க, இந்த கடும் பிரச்சனையை உடனே நீக்கலாம். மலச்சிக்கல் பிரச்சனையை பற்றித்தான் நாம் இப்போது பார்த்துக் கொண்டிருக்கின்றோம். இதனால், மனதளவில் பாதிக்கப்படுவோர் அதிகளவில் இருக்கின்றார்கள். இதை சரி செய்ய நிறைய மருந்துகள் இருக்கின்றது. இதை தவிர பல காய்கள் இருக்கு, ஆனால், இதையெல்லாம் பயன்படுத்தாத சூழ்நிலை பலபேருகிட்ட இருக்கின்றது. ஆனல், அனைவரின் வீடுகளிலும் அடுப்பனையில் இருப்பது வெந்தயம். உடலில் அதிகமா உஷ்ணம் இருந்தால், இந்த பிரச்சனை வரும்.

    அதற்கு குளிர்ச்சியா இருக்கின்ற, இந்த வெந்தயத்தை முதல் நாள் இரவில் ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு சிட்டிகை அளவில் ஊற வைத்து, காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் மலச்சிக்கல் ஓடியே போய்விடும். இந்த வெந்தயத்தை வறுத்து பொடி செய்து, தினமும் மோரிலோ, வெந்நீரிலோ  அந்த வெந்தயப் பொடியோடு, கொஞ்சம் பெருங்காயப் பொடியை கலந்து குடித்தால், உடலில் உள்ள உஷ்ணத்தையும், கேஸையும், இதனால் வரக்கூடிய வயிற்று வலியையும் போக்கி விடும். இதை சக்கரை நோய் உள்ளவர்களுக்கு காப்பியில் கலந்து கொடுத்தால், சக்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடும். நம் உடலுக்கு தேவையான புரதம், சக்கரை, வைட்டமின்கள், உலோகச்சத்துக்கள் நிறைய இருக்கும். இதே போல் வெந்தயக்கீரையும் ரொம்பவே நல்லது.  இதில் கால்சியம் சத்து நிறையவே இருக்கின்றது. இதனால் கால்சியம் சத்தும் உள்ளது. இதனால் எழும்புகளும் வலுப்பெறும். இதனுடைய பல நன்மைகளைப் பற்றி கூறிக் கொண்டே போகலாம்.
        இவ்வளவு பலன்களை அளிக்கும் வெந்தயத்தை தினமும் உண்டு பயனடைந்து வாழுங்கள் மகிழ்ச்சியுடன் ஆரோக்கியத்துடன்!வெந்தயம் நல்ல வைத்தியம் | Health Benefits of Fenugreek | Organic Living

https://youtu.be/QgvYtLjjKr4