வெற்றிலை போட்டா நல்லதாம்ல | Vethalai Betel is really an amazing leaf | ...ஒரு பையனுக்கு மாப்பிள்ளை பார்க்க வேண்டும் என்றால், அந்த பையனை பற்றி நல்லவிதமாக சொல்லனும், அப்படீன்னா என்ன சொல்லனும். அந்த பையனுக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை. ஒரு வெத்தலை பாக்கு கூட போட மாட்டாருன்னு சொல்லுவாங்க. ஆனா, உண்மை என்னன்னா, வெற்றிலை பாக்கு போடாமல் இருப்பதுதான் கெட்ட பழக்கம். பாக்கை கூட விடுங்க. வெற்றிலையில் எவ்வளவு நன்மைகள் இருப்பது என்பது பற்றி பார்ப்போம்.

    அதுக்கு முன்னாடி நம் தமிழ் மொழிக்கு கொடுக்கின்ற மரியாதையை, நாம் வெற்றிலைக்கும் கொடுக்கனும். இது ஏன் என்றால், மனித இனம் தோன்றிய காலத்தில் இருந்தே, மனிதன் வெற்றிலையை பயன்படுத்த ஆரம்பிச்சிட்டான். இந்தியாவில் மிக வெப்பம் மற்றும் குளிர்ச்சியான வங்காளம், ஒரிசா, தமிழ்நாடு, மும்பை போன்ற இடங்களில் இது பயிடப்படுகின்றது. வெற்றிலையில் கால்சியம் இரும்புச் சத்து அதிகமாக இருக்கின்றது. இது தவிர கேடினில், ஜாதிக்காய், பைரோ கடிசல், பூஜினால்எக்ஸ்ரா ராபல், ஆக்ஸாலிக் அமிலம் போன்ற பல நோய்களை குணப்படுத்தும் மருத்துவ குணம் வெற்றிலையில் உள்ளது. இதன் வேர்களும் மருத்துவத்திற்கு பயன்படுகின்றது. இதன் இலைகளில் இருந்து வெளியாகும் எண்ணை மூச்சுக் குழல் நோய்களுக்கு மருந்தாகின்றது. இதன் இலையின் சாறு ஜீரண சக்தியை அதிகரிக்கின்றது. அதனால்தான் நாம் உணவு உண்டதற்கு பின்பு இந்த வெற்றிலையை உண்கின்றோம். கால்சியம் இதில் இருப்பதால், குழந்தைகளுக்கு சளி பிடித்திருந்தால் இந்த வெற்றிலையில் சாறு எடுத்துக் கொடுப்பார்கள்.

        வெற்றிலையில் எவ்வளவு நன்மைகள் இருக்கின்றது என்பதை பார்த்தீர்கள் அல்லவா. அதனால், தங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் வெற்றிலை சாப்பிடுங்கள் நண்பர்களே!

வெற்றிலை போட்டா நல்லதாம்ல |  Vethalai Betel is really an amazing leaf | Organic Living

https://youtu.be/xQHW1IG68M8